என் மலர்tooltip icon

    உலகம்

    • ஏற்கனவே ஏழு பேரை விடுவித்த நிலையில், தற்போது 8 பேரை விடுவித்துள்ளது.
    • இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள்.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 45 நாட்கள் கழித்து இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டு ஹமாஸ் அமைப்பினர் சுமார் 150 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

    அதன்பின் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அதன்பின் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு, டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது ஏற்பட்டது.

    6 வாரம் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். அத்துடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே பிணைக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

    அதன் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் முதற்கட்டமாக 3 பேரையும், 2-வது கட்டமாக 4 பேரையும் விடுதலை செய்தது.

    இந்த நிலையில் இன்று 3-வது கட்டமாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் 8 பேரை விடுவித்துள்ளது. இதில் 20 வயது ஆகம் பெர்கர் என்ற பெண் ராணுவ வீரர் ஆவார். இவரை இன்று முன்னதாகவே விடுவித்தது.

    அதன்பின் அர்பெல் யெஹூத் (29), 80 வயது முதியவர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 8 பேரை விடுவித்தது.

    இவர்களில் அர்பெல் யெஹூத்iத முகமூடி அணிந்த ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானோருக்கு நடுவே அழைத்து வந்தனர். இதனால் ஒரு வகையான குழப்பம் நீடித்தது. இதனால், பிணைக்கைதிகள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதை மத்தியஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தை சேர்ந்த 23 பேர் உள்பட 100-க்கும் அதிகமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தாய்லாந்தை சேர்ந்த இன்னும் 3 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    போர் நிறுத்தத்தின் முதற்கட்டத்தில் 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு இணையாக சுமார் 2000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

    • ஈராக்கைச் சேர்ந்த சல்வான் மோமிகா முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார்.
    • இத்தகைய செயலுக்கு இஸ்லாமிய நாடுகள் ஸ்வீடனை கடுமையாக விமர்சித்தன.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 2023-ம் ஆண்டில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஒரு எதிர்ப்பாளர் குரானை எரித்துள்ளார். இத்தகைய செயலை அனுமதித்ததற்காக ஸ்வீடனை பல இஸ்லாமிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

    ஈராக்கில் பிறந்த அகதியான சல்வான் மோமிகா என்பவர் முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார். இந்தச் செயலைத் தொடர்ந்து ஒரு இனம் அல்லது தேசியக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் குரானை எரித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய நாள் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

    பல போராட்டங்களில் குரான்களை எரித்த ஈராக்கிய கிறிஸ்தவரான சல்வான் மோமிகா இன வெறுப்பைத் தூண்டும் குற்றவாளியா என்பதை ஸ்டாக்ஹோம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் சல்வான் மோமிகா இறந்துவிட்டதால் கூடுதல் அவகாசம் தேவை எனக்கூறி தீர்ப்பை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • படகுகளில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
    • நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

    அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமாக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண்டிருந்தது.

    அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர்.


    அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர். படகுகளில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலன்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் சிக்கிய 64 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

    அதேபோல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 3 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்தைதொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

    விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கிஉள்ளது. இதற்கிடையே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறும்போது , விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீது எங்களுக்கு கவலை உள்ளது. நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அவசரகால மீட்பு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார்.
    • இந்த ஓட்டலில் ஒரு விருந்தினருக்கு 8 ஊழியர்கள் இருப்பார்கள்.

    உலகின் ஒரே 10 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல் என்று அழைக்கப்படுவது துபாயில் உள்ள ஜூமேரா புர்ஜ் அல் அரப் ஓட்டலாகும். துபாயில் ஏற்கனவே புர்ஜ் கலிபா போன்ற உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில், அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.

    இந்த ஓட்டலின் உயரம் 321 மீட்டர் ஆகும். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும். இங்கு வரும் விருந்தினர்களுக்கு பல சொகுசு விடுதிகள், பிரைவேட் பீச், நீச்சல் குளங்கள், தங்க பேசியல், டைமண்ட் மசாஜ் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் உள்ளன.

    ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார். இந்த உதவியாளர் 24 மணிநேரமும் விருந்தினர்களுக்கு உதவ தயாராக இருப்பார். இந்த ஓட்டலில் ஒரு விருந்தினருக்கு 8 ஊழியர்கள் இருப்பார்கள். ஓட்டலின் மேல்தளம் மட்டும் 10 சதுர மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்த இடவசதி கொண்டது. கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருப்பதால் அலைகளுக்கு மேல் மிதப்பதை போன்ற அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்குகிறது.

    இங்கு 8 உலகத்தரம் வாய்ந்த விடுதிகளும் உள்ளன. அதில், ஒரு உணவு விடுதி நீருக்கு அடியில் உள்ளது. இங்கிருந்து விருந்தினர்கள் கடல்வாழ் உயிரினங்களை கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து கொண்டே சுவையான உணவுகளை சாப்பிட முடியும். இந்த ஓட்டல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



    • சிறப்பாக செயல்பட்டதாக அலிபாபா தெரிவித்துள்ளது.
    • தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.

    சீனாவை சேர்ந்த அலிபாபா தனது ஏ.ஐ. மாடல் Qwen2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏ.ஐ. மாடல் தற்போது அதிக பிரபலமாக இருக்கும் டீப்சீக் ஏ.ஐ., ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் GPT-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.

    இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "Qwen 2.5-Max ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளது.

    சர்வதேச ஏ.ஐ. தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், அலிபாபா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், டீப்சீக் நிறுவனத்தின் R1 ஏ.ஐ. மாடல் சிலிகான் வேலியை ஆட்டம் காண செய்ததோடு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.

    டீப்சீக்-இன் ஏ.ஐ. மாடல் அதிவேகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5 Max ஏ.ஐ. மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    • மலேசியாவின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
    • 5000-த்திற்கும் மேற்பட்டார் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • இதுவரை இரு கட்டமாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
    • இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதுவரை இரு கட்டமாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது

    இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மேலும் விடுவிக்கப்பட உள்ள 8 பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்டது. இவர்கள் இன்று விடுவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், இந்த வாரம் இரு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் உள்பட பிணைக்கைதிகள் 11 பேர் விடுவிக்கப்படுவர். ஹமாஸ் இதுவரை 7 பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக கைதிகள் 290 பேர் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.

    • 123 பக்கங்களைக் கொண்ட அறிக்கை தாக்கல்.
    • வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

    இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    நிஜ்ஜார் கொலை மற்றும் கனடா தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்கக் கனடா அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 123 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் நிஜ்ஜார் கொலையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பினர்.

    இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.

    • புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் கூறினர்.
    • புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ஒருவர், புலியின் சிறுநீரகத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இதை பயன்படுத்தினால் முடக்கு வாத நோயை குணப்படுத்த முடியும் என்று கூறி 250 கிராம் சிறுநீர் பாட்டிலின் விலை சுமார் 50 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.596)-க்கு விற்கப்படுவதாக சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    மேலும் இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து குடித்தால் அல்லது வலி இருக்கும் இடத்தில் தடவினால் வலி குணமாகும். ஆனால், இதை எடுக்கும் போது உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதற்காக புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் கூறினர். இவ்வாறு விற்பனை செய்ய அவர்களிடம் வணிக உரிமம் மற்றும் செயல்பட அனுமதி இருப்பதால் அதை விற்க அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    எனினும், புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, இந்தியாவில் பசுவின் கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதால் அதனை குடித்தால் நோய்கள் குணமாகும் என்று ஐஐடி இயக்குனர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு சிலர் ஆதரவுக் குரல் எழுப்பி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
    • விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

    அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமேக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண் டிருந்தது.

    அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர்.

    படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலனஸ்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 64 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    விபத்தை தொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

    விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.

    சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார். 

    நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.

    அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய ராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 

    • ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
    • ஊழியர்கள் தங்களால் எண்ணக்கூடிய அனைத்து பணத்தையும் 15 நிமிடங்களுக்குள் வைத்திருந்தனர்.

    சீன நிறுவனமான ஹெனான் மைன் கிரேன் தனது தொழிலாளர்களுக்கு 270 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்க போனஸை வழங்கியுள்ளது.

    சீனாவில் 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை மேசையில் வைத்தது.

    இந்த ஆண்டு இறுதியில் வழக்கமான போனசுக்குப் பதிலாக, சீன நிறுவனம் ஒரு தனித்துவமான நிகழ்வை ஏற்பாடு செய்தது. அங்கு பெரிய மேஜையில் மிகப்பெரிய அளவில் ரூ.70 கோடி வைக்கப்பட்டது.

    நிறுவனம் 60-70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் பணத்தை அடுக்கி வைத்து, ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.

    பிறகு, ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமா அவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஊழியர்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது.

    போட்டி வேகமாக இருந்தது, ஒவ்வொரு ஊழியரும் விரைவாக பணத்தைப் பிடுங்கி எண்ணத் தொடங்கினர்.

    ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ண எடுத்தார். அவர்கள் எடுத்த பணத்தை அவர்களுக்கே வழங்கப்பட்டது. இதன் வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.

    ×