சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக அகமது அல் ஷரா நியமனம்

அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.
சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக அகமது அல் ஷரா நியமனம்
Published on

சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார். 

நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.

அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய ராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com