என் மலர்tooltip icon

    உலகம்

    • எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
    • இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க முன்வந்த விவகாரம் நகைச்சுவை இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய நலனாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கலாம் என்று மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்தார். தி மெக்கின் கெல்லி நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார், கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

    "இது ஒன்றும் ஜோக் இல்லை. இது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக கையகப்படுத்தும் விஷயம் இல்லை. இது நம் தேசிய நலனுக்கானது. இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இது அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி தந்திரமாக கையாள வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆர்க்டிக் பகுதி எங்கள் கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்," என்று தெரிவித்தார்.

    ஆர்க்டிக் பகுதி அமெரிக்கா பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய கப்பல் போக்குவரத்து தளமாக உருவெடுக்கும். சீனா இந்த பகுதியில் தனது இருப்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என்று ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வடமேற்கு கிரீன்லாந்தில் நிரந்தர ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டென்மார்க்-இடம் இருந்து சுதந்திரம் பெற முயற்சித்து வரும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், தங்களது தீவு விற்பனைக்கு அல்ல என்றும், மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

    • அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மற்ற உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் நடு வானில் ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த புதன்கிழமை இரவு தலைநகர் வாஷிங்டனில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.

    ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இந்த விபத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமாவே காரணம் என தற்போதைய அதிபர் டொனல்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

    விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று [வியாழக்கிழமை] செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.

    அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 இல் நான் அதிபரானபோது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.

    ஆனால் 2020 இல் ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார். இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கொடூர வான் விபத்துகளில் ஒன்றாக மாறியது.
    • பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றில் அரங்கேறிய கொடூர வான் விபத்துகளில் ஒன்றாக இந்த துயர சம்பவம் மாறியது.

    இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல். இந்த துயரில் அமெரிக்க மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    விபத்தின் போது விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு பகுதியில் பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    • சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்யும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வீடுகள் முன்பும், சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் அங்கு ஒரு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடி தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்த நிலையில், பனியை அகற்றுவதற்காக ஒரு வாலிபர் 3 மாத கைக்குழந்தையை பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. அந்த வாலிபர் தனது காரின் கண்ணாடியில் இருந்த பனியை துடைப்பதற்காக 3 மாத குழந்தையை கருவி போல பயன்படுத்தி பனியை அகற்றும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

    டிக்-டாக் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழமையான டசியா நாகரிகத்தை சேர்ந்த தங்க கிரீடம் மற்றும் தங்க காப்புகள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
    • உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால்தான் திருட்டு சம்பவம் நடந்ததாக நெதர்லாந்து மீது ரோமானியா அரசாங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து அருகே ஏசேன் நகரில் டிரென்ட்ஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ரோமானியா நாட்டின் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான டசியா நாகரிகத்தை சேர்ந்த தங்க கிரீடம் மற்றும் தங்க காப்புகள் ஆகியவை பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம கும்பல் ஒன்று அருங்காட்சியகத்தில் துளையிட்டு புகுந்து தங்க கிரீடம், தங்க காப்புகள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

    அருங்காட்சியகத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால்தான் திருட்டு சம்பவம் நடந்ததாக நெதர்லாந்து மீது ரோமானியா அரசாங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்தநிலையில் திருட்டுப்போன தங்க கிரீடம் மற்றும் காப்புகளை மீட்க நெதர்லாந்து போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    • நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை சேர்ந்தவர் அன்வரூல் ஹக். இவருக்கு திருமணமாகி ஹீரா (வயது 15) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறி குடியுரிமை பெற்று 28 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சிறுமி ஹீரா அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்துள்ளார்.

    ஹீரா தனது செல்போனில் பிரபல சமூக வலைத்தள செயலியான டிக்டாக்கை பதிவிறக்கம் செய்து அதில் வீடியோ வெளியிட்டு நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.

    ஹீராவின் இந்த நடவடிக்கையை அன்வரூல் ஹக் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் ஹீரா டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பு அன்வரூல் ஹக் தனது மகள் ஹீராவுடன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு வந்திருந்தார். பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் உள்ள பூர்வீக வீட்டில் ஹீராவுடன் அன்வரூல் ஹக் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று அன்வரூல் ஹக் வீட்டினுள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கே வீட்டு முற்றத்தில் ஹீரா உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். சிறுமியை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்தான விசாரணையில் அன்வரூல் ஹக் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒத்து கொண்டுள்ளார். சிறுமி ஹீரா தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்தி வந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்வதற்காகவே அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு கூட்டி வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து அன்வரூல் ஹக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.
    • டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது.

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

    ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அதோடு வன்முறையை தூண்டும் வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

    இதன் விளைவாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.

    இதனால் கோபமடைந்த டிரம்ப், தன் மீது அவதூறு சுமத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியதாக கூறி மெட்டா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி ஆகியுள்ள டிரம்ப், கடந்த காலங்களில் தன்னை விமர்சித்தவர்கள் மற்றும் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

    இதனிடையே மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தொழிலை சுமூகமாக நடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.

    இதன்காரணமாக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி வழக்கை முடித்துக் கொள்ள டிரம்புக்கு 25 மில்லியன் டாலர் (ரூ.216 கோடி) வழங்குவதாக மெட்டா நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    • ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.
    • ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.

    ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.

    கடந்த புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு எதிரே உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.

    ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.
    • 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது.

    டோக்கியோ:

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

    ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்திருந்தனர்.
    • 1 லட்சம் பொதுமக்கள் வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.

    கின்சாசா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

    இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் மற்றும் கிளர்ச்சியளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும் வன்முறை தொடர்ந்து வரும்நிலையில் அப்பகுதியில் உள்ள 1 லட்சம் பொதுமக்கள் வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இந்தநிலையில் வன்முறையில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    • உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
    • உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    தைபே:

    தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தைவான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தைவானில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விவசாய தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது.

    இந்தநிலையில் நாட்டில் உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் அந்த நாட்டின் விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க தைவான் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் வனத்துறை கணக்கீட்டின்படி 2 லட்சம் உடும்புகளில் இருந்து 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல உள்ளது.

    இதற்காக வேட்டைக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஒரு உடும்புக்கு ரூ.1,300 (15 அமெரிக்க டாலர்) சன்மானமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.
    • குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    கீவ்:

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    அதேபோல் உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ரஷிய டிரோன்கள் ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் இரவு நேரங்களில் ரஷியா ஏவிய 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது, இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள். பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    ×