அமெரிக்கா விமான விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொடூர வான் விபத்துகளில் ஒன்றாக மாறியது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா விமான விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றில் அரங்கேறிய கொடூர வான் விபத்துகளில் ஒன்றாக இந்த துயர சம்பவம் மாறியது.

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல். இந்த துயரில் அமெரிக்க மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

விபத்தின் போது விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு பகுதியில் பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com