என் மலர்tooltip icon

    உலகம்

    • 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டது.
    • நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார்.

    ஓஸ்லோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் 8 போர்களை நிறுத்தி உள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.

    ஆனால், 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையே, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு நார்வே பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோர் பதிலளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நோபல் அமைதிப் பரிசைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் உள்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவது அல்ல. ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது. நார்வே, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் அறிவித்த வரி உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை அவரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

    • கடைகளில் இருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களில் தீ வேகமாகப் பரவியது.
    • 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், நேற்று வரை மீட்புப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கராச்சி மால் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 63 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பல்வேறு உடல் பாகங்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும்
    • கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

    ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், தனது AI படத்தை Truth Social தளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.

    மேலும், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மகனாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் வெனிசுலா நட்டு அதிபரை கைது செய்து அட்டையும் டிரம்ப் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா அமைதி வாரியத்தில் சேருவதற்காக பல்வேறு நட்டு தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
    • டிரம்பின் அழைப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகினது.

    அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார்.

    துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டிரம்பின் அழைப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகினது.

    இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால், 200% வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியுள்ளார்.

    பிரான்ஸ் தயாரிப்பு மதுபானங்கள் மீது 200% வரி விதித்தால், அதிபர் மேக்ரான் வாரியத்தில் சேர்ந்துவிடுவார் என டிரம்ப் பேசியுள்ளார்.

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • எதிர்ப்பு தெரிவித்த நாடுகள்மீது கூடுதல் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

    ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    • கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது.
    • அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தஞ்சம் அடைந்தன.

    ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது.

    கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது. அந்த சமயத்தில் ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தஞ்சம் அடைந்தன. இந்த விமானத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இருந்தன.

    2023 ஆம் ஆண்டில் ஈராக் அரசாங்கம் அழைப்பு விடுத்ததிலிருந்து அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த படைகளை அமெரிக்க இராணுவம் பல ஆண்டுகளாக அதைக் குறைத்து வந்தது.

    இந்நிலையில், ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

    இனிமேல் அமெரிக்கா உடனான உறவு, நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் அறிவித்துள்ளது.

    • பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்.
    • உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.

    உலக அளவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து Oxfam இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 இல் இருந்து 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 

    தற்போது அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 18.3 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.1,660 லட்சம் கோடி ) என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அதாவது, உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.

    அறிக்கைப்படி, ஒரு சாதாரண குடிமகனை விட, ஒரு கோடீஸ்வரர் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    மேலும் அந்த அறிக்கையில், ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து உயரும் நிலையில், மறுபுறம் உலகில் உள்ளவர்களில் நான்கு பேரில் ஒருவருக்குச் சரியான உணவு கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பணக்காரர்களுக்குச் சாதகமாக வரிகளைக் குறைத்தது மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது போன்ற செயல்பாடுகள், கோடீஸ்வரர்களின் சொத்து உயர முக்கியக் காரணமாக இருந்ததாக ஆக்ஸ்பாம் சாடியுள்ளது.

    உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைதளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில், ஜனநாயகம் சீர்குலைய 7 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அறிக்கை எச்சரிக்கிறது.

    இவற்றுக்கு தீர்வாக பணக்காரர்கள் மீது அதிக வரி, அரசியலில் பணத்தின் ஆதிக்கம் குறைப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் வேண்டும் என்று Oxfam அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

    அதேநேரம் இந்தியாவின் இடஒதுக்கீடு முறை அதிகாரத்தை ஜனநாயகப்படுத்தும் ஒரு சிறந்த வழி எனவும் Oxfam தனது அறிக்கையில் பாராட்டி உள்ளது.  

    • 'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.
    • இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

    தாவரங்கள் அவற்றின் இலைகளில் உள்ள 'ஸ்டோமாட்டா' (Stomata) எனப்படும் நுண்துளைகள் வழியாகச் சுவாசிக்கின்றன.

    இதுவரை யாரும் அதை நேரில் பார்த்ததில்லை. தற்போது அந்த அரிய நிகழ்வை முதன்முறையாக வீடியோவாகப் பதிவு செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

    அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.

    அதிநவீன Confocal microscope, Machine Learning மென்பொருள் ஆகியவற்றை இணைத்து இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கருவி, தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்காகக் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்போதும், அதே நேரத்தில் Transpiration மூலம் நீரை வெளியேற்றும்போதும் இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. சுமார் 5 ஆண்டுகள் உழைப்பால் இந்த கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். 

    • பிப்ரவரி 8, 2026 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது.

    ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு  பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார். 

    கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார். 

    பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.   

    • ஓட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • முதற்கட்ட விசாரணையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காபூல் நகரின் முக்கிய வணிக பகுதியில் ஒன்றாக கருதப்படும் ஷஹர்-இ-நவ் பகுதியில் ஓட்டலை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இந்த இடம் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது லாரியுடன் மோதல்.
    • சம்பவ இடத்திலேயே 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

    தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பள்ளி மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தனியார் வாகனம் பல்வேறு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பள்ளி சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

    மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து டிரைவரிடம் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    • 2025-ல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024-ம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது.
    • 2024-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது.

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிட்ட வகையில் குறைந்துவ வந்ததால், ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியது.

    கடந்த 2015-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை நீக்கி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. என்றாலும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதனால் இரண்டு குழந்தைகள் பெற்றக்கொள்ளும் தம்பதிக்கு அரசு சலுகைகள் வழங்கும் எனவும் தெரிவித்தது. அதற்கு பலனில்லை.

    இதன்காரணமாக, கடந்த 2023-ம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் இந்தியாவைவிட பின்தங்கியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பு விகிதம் சற்று அதிகரித்தது. ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு முந்தைய ஆண்டைவிட 17 சதவிதம் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. 2025-ல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024-ம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது.

    2024-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி சீனாவில் மக்களை தொகை 1.404 பில்லியன் ஆகும்.

    ×