என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாகிஸ்தான் 49 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது.
- முகமது ஹாரிஸ் 23 பந்தில் 31 ரன்களும், ஷாஹீன் அப்ரிடி 19 ரன்களும், முகமது நவாஸ் 15 பந்தில் 25 ரன்களும் சேர்த்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வங்கதேசத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 49 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
முகமது ஹாரிஸ் 23 பந்தில் 31 ரன்களும், ஷாஹீன் அப்ரிடி 19 ரன்களும், முகமது நவாஸ் 15 பந்தில் 25 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 120 ரன்களை தாண்டியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணியின் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கை குறைந்துவிட்டது.
- பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தமிழகத்தின் காலை உணவு, புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த கல்வியாண்டு மதல் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் என என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசின் கல்வி திட்டங்களை பாராட்டினர்.
இந்த நிலையில் திண்டுக்கல் வேடசந்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சியை பாராட்டுவதற்காக தெலுங்கானா முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். அப்படியா தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி உயர்ந்திருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கை குறைந்துவிட்டது. பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை அரசாங்கள் அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருப்பதாக, தவறான செய்தி வெளியீட்டு இந்த போட்டோ ஷூட், அதையெல்லாம் வெளிப்படுத்தி விளம்பர மாடல் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
- தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் தேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
அனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டை பார்த்து பெருமைப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு ஓரே மாதிரியான சமூக நீதி சிந்தனை உள்ளது. கலைஞர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கை தெலங்கானாவில் உள்ளவர்களை மிகவும் ஈர்த்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது.
- மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம். 1000 ஆண்டுகளாக சாதி என்னும் சதியால் கல்வி மறுக்கப்பட்டது. சாதி எனும் சதிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி இன்று வேகமாக நடைபோடுகிறது.
மாணவர்கள் படித்து முன்னேறும்போது அவர்களுடைய குடும்பமும் முன்னேறுகிறது. குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்.
கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்வதற்காக தான் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே நம்முடைய இலக்கு. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது. உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் வன்முறையா வெடித்து 74 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தின்போது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஷிலா கார்கி கூறியதாவது:-
தற்போதைய அரசுக்கு அரசிலமைப்பு திருத்துவதற்கும், நிர்வாக அமைப்பு மாற்றுவதற்கும் அதிகாரம் கிடையாது. ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதையும், மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.
போராட்டத்தின்போது உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதியில் பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு சுஷிலா கார்கி தெரிவித்தார்.
- வெற்றி பெற்ற பிறகு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசியதாக குற்றச்சாட்டு.
- பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த போட்டி நடுவருக்கு ஐசிசி உத்தரவு.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் அத்துமீறல், இந்தியாவின் பதிலடி என இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டைபெற்று, இன்னும் இருநாட்டு உறவுகள் மேம்படாத நிலையில் இந்த போட்டி தேவையா? என்ற கேள்வி எழும்பியது.
ஆனால், இருநாடுகளுக்கு இடையிலான போட்டியை மத்திய அரசு ஆதரிக்காது. ஆனால் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடரில் இந்தியா பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.
இருந்தபோதிலும் போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் கைக்குலுக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும்போதும் கைக்குலுக்கவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே குரூப் பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது "சரியான சந்தர்ப்பம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திய எங்கள் அனைத்து ஆயுதப் படைகளுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்கள் அரசு, BCCI இன்று இணைந்துள்ளோம். நாங்கள் இங்கு ஜஸ்ட், போட்டியில் விளையாட வந்தோம்" எனத் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் போட்டியின்போது அரசியல் தொடர்பான கருத்துகளை வீரர்கள், கேப்டன்கள் வெளிப்படுத்தக்கூடாது. அப்படி வெளிப்படுத்தினால் அது வீரர்களின் நன்னடத்தை விதியை மீறுவதாகும். சூர்யகுமார் நன்னடத்தை விதியை மீறியதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சனை விசாரணை நடத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதை ரிச்சி ரிச்சார்ட்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பிசிசிஐ சிஓஓ ஹெமங் அமின் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கு மானேஜர் சம்மேர் மலாபுர்கர் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பெங்களூரு வெளிப்புற ரிங் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.
- விப்ரோ வளாக சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கடிதம்.
பெங்களூருவின் வெளிப்புற ரிங் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு சில கி.மீ. தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆகிறது. இதற்கு கர்நாடக அரசு ஒரு நிரந்தரமாக தீர்வை காண முடியாமல் தவித்து வருகிறது.
விப்ரோ நிறுவனத்திற்கு சர்ஜாபூரில் வளாகம் உள்ளது. இந்த வளாகளத்தில் வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாகிய ஆசிம் பிரேம்ஜி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஆசிம் பிரேம்ஜி சித்தராமையாகவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நாங்கள் சர்ஜாபூரை வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலாக வைத்துள்ளோம். உலகளாவிய சேவை பணிகளுக்கான அந்த இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடுமையான அணுகுதல் கட்டுப்பாடு உள்ளது.
பொதுப் பாதைக்காக அல்லாமல் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்யேக தனியார் சொத்து என்பதால், குறிப்பிடத்தக்க நிர்வாகம் மற்றும் சட்டரீதியான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும், தனியார் சொத்துக்கள் வழியாக பொது வாகன இயக்கம் ஒரு நிலையான, நீண்டகால பயனுள்ளதாக தீர்வாக இருக்காது என பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
- நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
- வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மேலும் கூறியதாவது:-
செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகுதியும் இல்லை. வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.
விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
- இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
வங்கதேச அணி வெற்றி பெற்றால் வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? போட்டியாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் ஜாகர் அலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
- நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பு.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என சைகை காட்டினர். இதனால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக கூறுகையில் "அரசியல் டென்சனில் இருந்து கிரிக்கெட் ஸ்பிரிட் எப்போதும் தனித்து இருக்க வேண்டும். கார்கில் போரின்போது 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர்கள் கைக்குலுக்கினர். இரு தரப்பினரிடமிருந்தும் பழிவாங்கும் சைகைகள் விளையாட்டு மனப்பான்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
என்று அகர்கர் கூறினார்.






