என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்- மு.க.ஸ்டாலின்
    X

    உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்- மு.க.ஸ்டாலின்

    • மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது.
    • மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம். 1000 ஆண்டுகளாக சாதி என்னும் சதியால் கல்வி மறுக்கப்பட்டது. சாதி எனும் சதிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி இன்று வேகமாக நடைபோடுகிறது.

    மாணவர்கள் படித்து முன்னேறும்போது அவர்களுடைய குடும்பமும் முன்னேறுகிறது. குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்.

    கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்வதற்காக தான் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.

    அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே நம்முடைய இலக்கு. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது. உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×