என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அப்படியா தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி உயர்ந்திருக்கிறது? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கை குறைந்துவிட்டது.
- பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தமிழகத்தின் காலை உணவு, புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த கல்வியாண்டு மதல் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் என என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசின் கல்வி திட்டங்களை பாராட்டினர்.
இந்த நிலையில் திண்டுக்கல் வேடசந்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சியை பாராட்டுவதற்காக தெலுங்கானா முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். அப்படியா தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி உயர்ந்திருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கை குறைந்துவிட்டது. பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை அரசாங்கள் அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருப்பதாக, தவறான செய்தி வெளியீட்டு இந்த போட்டோ ஷூட், அதையெல்லாம் வெளிப்படுத்தி விளம்பர மாடல் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






