என் மலர்
தலைப்புச்செய்திகள்
- குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, தெரியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை வாகனத்தில் நிற்கவைத்துவிட்டு, குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும், உயிர் பிழைத்தவர்கள் பலர் பேருந்தில் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார்.
மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்று அரேவலோ குறிப்பிட்டிருந்தார்.
- ஜீவா (19), தனக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார்.
- தநதையை மிரட்டுவதாக நினைத்து பிப்ரவரி 8ம் தேதி ஜீவா தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார்
சென்னை மாவட்டம் நெற்குன்றத்தை சேர்ந்த ஜீவா (19), தனக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜேவா அவரது தந்தை முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவரை மிரட்டுவதாக நினைத்து பிப்ரவரி 8ம் தேதி ஜீவா தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார்
அப்போது அங்கே குளிர்காய மூட்டப்பட்டிருந்த தீ ஜீவா மீது பற்றியதால் அப்பாவின் கண்முன்னே ஜீவா தீப்பிடித்து அலறியுள்ளார்.
விபத்திற்கு பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
- இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம்.
பெரியார் மண்ணில் கழகம் பெற்ற பெருவெற்றியை குறிக்கும் வகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவச்சிலையை அண்ணன் சந்திரகுமார் அவர்கள் நமக்கு பரிசளித்தார்கள். அவரது பணிகள் சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- . இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின்3 நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் இதுவரை 62.37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
- இது தொடர்பாக சதீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரெயிலில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக சதீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சதீஸ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக, திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு.
- உயிரிழப்பு எண்ணிக்கையை மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
மகா கும்பமேளா திருவிழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதாவது ஜனவரி 29-ந்தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஒரே நேரத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைப்பதாக மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பிரயாக்ராஜ் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பட்ஜெட் கூட்ட விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி பேசுகையில் "45 நாட்கள் கும்பமேளா திருவிழாவிற்கான 2500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய மற்றும் துரதிருஷ்டவசமான கூட்ட நெரிசல் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தவர்களின் எணணிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்குதல் குறித்து எந்த தெளிவும் இல்லை.
மாநில அரசின் குறைபாடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை அல்லது விசாரணை மத்திய அரசால் ஏன் எடுக்கப்படவில்லை?, நீங்கள் அதை ஒரு உள்நாட்டு பிரச்சனையாக ஆக்கிவிட்டீர்கள். அது இனி ஒரு மாநில பிரச்சினை அல்ல. மகா கும்பமேளா தொடர்பான புகார்களை விசாரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
- நாதக நிர்வாகிகள் விலகி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் 12 பேர் விலகியுள்ளனர்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் நிர்வாகிகள் விலகி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
பெரியார் குறித்து சீமான் பேசியது மேலும் அதிருப்தியை உருவாக்கி மேலும் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாதகவில் இருந்து சுமார் 3000 நிர்வாகிகள் விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியுள்ளனர்.
அதன்படி, அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
- தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ, அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை
- தண்டனைக் கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு திட்டவட்டம்
மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
- நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'.
- இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- பெண்களை சீட்டிலிருந்து எழக்கோரி இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதியை தமிழ்நாடு வழங்கி வருகிறது.
இந்நிலையில், "ஓசி டிக்கெட்ல தானே பயணம் பண்றீங்க.. நாங்க டிக்கெட் எடுத்துட்டு வர்றோம்" என அரசுப்பேருந்தில் பெண்களை சீட்டிலிருந்து எழக்கோரி இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற 'எண் 26' பேருந்தில் வடபழனி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
சீட்டில் அமர்ந்து இருந்த வயதானவர்கள், பெண்களை எழுப்பி விட்டு, அந்த சீட்டில் இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். இதற்கு பெண் பயனைகள் எதிர்ப்பு தெரிவிக்க, இளைஞர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் விளாசினார்.
- 1 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன், 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் (133 நாட்அவுட்), கான்வே (97) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து 304 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.
167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
150 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஹசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4-வது இடத்தில் உள்ளார்.






