என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பைக் கேட்டு அடம்பிடித்து தன்மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர்- தந்தை கண்முன்னே தீயில் கருகிய மகன்
    X

    பைக் கேட்டு அடம்பிடித்து தன்மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர்- தந்தை கண்முன்னே தீயில் கருகிய மகன்

    • ஜீவா (19), தனக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார்.
    • தநதையை மிரட்டுவதாக நினைத்து பிப்ரவரி 8ம் தேதி ஜீவா தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார்

    சென்னை மாவட்டம் நெற்குன்றத்தை சேர்ந்த ஜீவா (19), தனக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், ஜேவா அவரது தந்தை முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவரை மிரட்டுவதாக நினைத்து பிப்ரவரி 8ம் தேதி ஜீவா தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார்

    அப்போது அங்கே குளிர்காய மூட்டப்பட்டிருந்த தீ ஜீவா மீது பற்றியதால் அப்பாவின் கண்முன்னே ஜீவா தீப்பிடித்து அலறியுள்ளார்.

    விபத்திற்கு பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×