என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூரன்"

    • நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கூரன்.
    • கூரன் படத்தை அறிமுக இயக்குனரான நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.

    நாய்களை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    அந்த வரிசையில் அடுத்ததாக நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கூரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களம் அமைக்கப்ப்ட்டுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது.

    எஸ்.ஏ சந்திரசேகர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஒய் ஜி மகேந்திரன், சத்யன், பாலாஜி, சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா, ரோபோ சங்கர் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். கனா ப்ரொடக்ஷன் சார்பில் கனா விபி கம்ப்பைன்ஸ்டன் இணைந்து தயாரித்துள்ளார்.

    திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'.
    • சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

    இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார்.

    திரைப்படத்தின் இசையை வெளியிட்டு விட்டு, விழாவில் அவர் பேசும் போது, "இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும் காட்டப்பட வேண்டும்.

    எஸ். ஏ . சந்திரசேகரன் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்கு நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். அவர்களை விட நாம் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பார்க்க வேண்டும்.

    இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல ,கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம் .இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி"இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'.
    • இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'.
    • இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    ஒரு நாய் அதன் குட்டியை விபத்தில் பறிக்கொடுகிறது. அந்த விபத்திற்கு காரணமானவர்களின் மீது நாய் புகாரளிக்கிறது. இந்த வழக்கை SAC நீதி மன்றத்தில் வாதாடுகிறார். இந்த காடிகள் டிரெய்லரின் இடம் பெற்றுள்ளது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
    • எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.

    நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன் ' திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, "எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும்.

    அவர் திரைக்கதையில் ஒரு மன்னர். அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார். அவரது மகன் 26-வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.

    அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த 'கூரன்' படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்து இருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.

    நான் இந்த 'கூரன்' படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. அவர்கள். எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.

    இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும்? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார்? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப் படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.

    அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.

    வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி. அவர்கள் எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்; வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! "இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×