என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்ஏ சந்திரசேகர்"
- நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
- அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் தே.மு.தி.க. கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழப்புக்கு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி ,கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை."
"அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்."
"திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை."
"அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா சிறப்பு வழிபாடு செய்தனர்.
- கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்க்கு சொந்தமான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா ஆகியோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலைமைக்கு வர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விஜய்க்காக, வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் இணைந்து கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
- எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன் ' திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, "எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும்.
அவர் திரைக்கதையில் ஒரு மன்னர். அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார். அவரது மகன் 26-வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த 'கூரன்' படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்து இருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.
நான் இந்த 'கூரன்' படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. அவர்கள். எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும்? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார்? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப் படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி. அவர்கள் எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்; வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! "இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






