மாநாடு சிறப்பாக நடக்கணும்.. தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கணும்..- எஸ்.ஏ.சந்திரசேகர்

கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா சிறப்பு வழிபாடு செய்தனர்.கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மாநாடு சிறப்பாக நடக்கணும்.. தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கணும்..- எஸ்.ஏ.சந்திரசேகர்
Published on

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்க்கு சொந்தமான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா ஆகியோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

இதுகுறித்து தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலைமைக்கு வர வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விஜய்க்காக, வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் இணைந்து கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com