என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம்
- இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்நிலையில் படத்தை குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வாரங்களில் பல திரைப்படங்கள் வந்தாலும் குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக அதன் 4-வது வாரம் திரையரங்கிள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் நாளை (17.2.2025) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அமரன் வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் கைக்கோர்த்து உள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நாளை (17.2.2025) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
இதைமுன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும்,
நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும்,
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்,
தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய பெருங்கனவை நனவாக்கிய வெற்றி நாயகன்,
தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
- ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர்
தமிழ்நாடு - காசி இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மூன்றாவது வருடமாக தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரெயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரெயில் என்பதால் தமிழக பயணிகள் பெட்டிகளின் கதவுகளை பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதனால் வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இறுதி போட்டிக்கு வந்த 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக மும்பை உள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.
முஜீப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இரண்டாம் பாடலான மண்ட பத்ரம் பாட்லை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கானா பிரான்சிஸ் எழுதி பாடியுள்ளார். இப்பாடல் ஒரு குத்து கானா பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அவர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்ததை இந்திய எதிர்க்கட்சிகள் கண்டித்தன. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி இந்திய சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெற முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களும் கால்களில் சங்கிலி இடப்பட்டு, கைவிலங்கு பூட்டி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள குராலா கலான் கிராமத்தைச் தல்ஜித் சிங் என்பவர் நாடுகடத்தப்பட்ட 116 பேரில் ஒருவர். தங்களை சங்கிலியிட்டு அழைத்துவந்ததை இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் அனுப்பி வைப்பதாக கூறி தன்னை, சட்டவிரோதமாக டாங்கி ரூட் வழியாக ஒரு முகவர் ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, நாடுகடத்தப்பட்ட 116 பேரில், பாட்டியாலா மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரும் அடங்குவர். அவர்கள் வருவதை அறிந்து பாட்டியாலா போலீஸ் விமான நிலையத்தில் காத்திருந்தது. ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கு வைத்தே அவர்களை போலீஸ் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த இவர்கள், சட்டவிரோதமாக எல்லை கடந்து தப்பித்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
- புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது.
- பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?
அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம்.
- பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.
குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்றால் அவர்களை பெற்றோர் கண்டிப்பது இயல்பு. இவ்வாறு ஒரு தந்தை தனது மகனை திட்டியதால் ஆவேசமடைந்த சிறுவன் தந்தையை போலீசில் சிக்க வைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் சந்திர புத்தாண்டையொட்டி தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட பணத்தை எனது தந்தை திருடி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்சு மாகாண பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசில் புகார் அளித்துள்ளான். உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் சிறுவன் சரியாக படிக்கவில்லை என்பதால் அவனை தந்தை கண்டித்ததும், அந்த ஆத்திரத்தில் அவரை போலீசில் சிக்க வைத்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறினர். உனது பணத்தை தந்தை பத்திரமாக வைத்திருப்பார். உனக்கு பணம் தேவைப்படும் போது அந்த செலவுகளை அவர் செய்வார் என அறிவுரை வழங்கினர்.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி காலை 11 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சங்கிலி செயின் தொங்கிக் கொண்டு இருக்கிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமணம் ஊர்வலம் நடைபெற்றது.
- குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.
மத்திய பிரதேசத்தில் திருமணத்தை ஒட்டி குதிரையில் ஊர்வலமாக வந்த மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியோபூர் மாவட்டத்தில் பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
- மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.
திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.
இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே..
உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.
அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!
கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.
அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.
குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.
இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.
1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?
தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.
ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.
ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.
எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.
கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.
ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.
இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது!
- இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.
அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)
தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடியார்.
இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் எடப்பாடியார் அவர்களின் குரலாகத் தான் இருக்கும்!
இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அ.தி.மு.க. தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"!
தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே!
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது!
இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!
கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.






