என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ar murugadass"

    • மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடல் நாளை வெளியாகவுள்ளது.
    • இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

    அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்,"மான்கராத்தே நிகழ்ச்சியின் போது, தொலைக்காட்சியில் இருந்து வந்த ஒரு நடிகராக சிவகார்த்திகேயனை நான் கண்டேன்.

    எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். இப்போது மதராசி நிகழ்ச்சியில் சிவகாரத்திகேனின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

    • சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஏழாம் அறிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    மேலும், இப்படத்தில் கதாநாயகியான ஸ்ருதி ஹாசன் ஒரு காட்சியில் இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று பேசியிருப்பார். இந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "'ஏழாம் அறிவு' படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லை. படப்பிடிப்பிலும், சீன் பேப்பரிலும் அதனை நான் பார்க்கவில்லை. இதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரோட அரசியல் நிலைபாடாக இருக்கலாம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை.


    டப்பிங்கிலும் இப்படி ஒரு வசனம் இருப்பது சூர்யாவுக்கு தெரியாது. ஆனால், படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து ஒரு காட்சி வருகிறது, அது வேண்டாம் எடுத்துவிடலாம் என்று கூறினார். ஆனால், நான் சின்ன விஷயம் தான் விட்டு விடுங்கள் என்று கூறினேன். அந்த சமயத்துல என்னோட அரசியல் புரிதல் அவ்வளவு தான் இருந்தது" என்று கூறினார்.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

    சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி காலை 11 மணிக்கு  இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சங்கிலி செயின் தொங்கிக் கொண்டு இருக்கிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×