எனக்கு அரசியல் புரிதல் இல்லை.. அப்பவே சூர்யா சொன்னார்- உதயநிதி திடீர் விளக்கம்

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஏழாம் அறிவு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
எனக்கு அரசியல் புரிதல் இல்லை.. அப்பவே சூர்யா சொன்னார்-  உதயநிதி திடீர் விளக்கம்
Published on

கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், இப்படத்தில் கதாநாயகியான ஸ்ருதி ஹாசன் ஒரு காட்சியில் இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று பேசியிருப்பார். இந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "'ஏழாம் அறிவு' படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லை. படப்பிடிப்பிலும், சீன் பேப்பரிலும் அதனை நான் பார்க்கவில்லை. இதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரோட அரசியல் நிலைபாடாக இருக்கலாம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை.

டப்பிங்கிலும் இப்படி ஒரு வசனம் இருப்பது சூர்யாவுக்கு தெரியாது. ஆனால், படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து ஒரு காட்சி வருகிறது, அது வேண்டாம் எடுத்துவிடலாம் என்று கூறினார். ஆனால், நான் சின்ன விஷயம் தான் விட்டு விடுங்கள் என்று கூறினேன். அந்த சமயத்துல என்னோட அரசியல் புரிதல் அவ்வளவு தான் இருந்தது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com