என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
- சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.
பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.
அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.
இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.
இந்நிலையில், கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திர புத்திரி' பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். இப்பாடலும் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட சாய் அபியங்கர் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அவர் கூறியதாவது " எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். அவ்வப்போது என் நண்பர்களோடு திரைப்படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மேலும் ஒரு மலையாள திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன். என் பாடலை கேட்டு நடிகர் சிம்பு அழைத்து பாராட்டினார்." என கூறீனார்.
மேலும் சாய் அபியங்கர் சிம்பு நடிக்கும் STR49 மற்றும் STR51 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மொழி அரசியல் செய்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மும்மொழி கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக திட்டங்களை வகுக்கவும், கொள்கைகளை உருவாக்கவும் மோடி அரசுக்கு மக்கள் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள். அதன்படியே மோடி அரசு பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்து வருகிறது அதில் ஒன்றுநான் புதிய தேசிய கல்விக் கொள்கை
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ) மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்திற்கான நிதி மட்டும் என்று திமுக அரசு கேட்கிறது. திட்டத்தை செயல்படுத்தினால் தான் சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறி இருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வது, இந்தி திணிப்பு. என்றும் மும்மொழி கொள்கை திணிப்பு என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான பொய். புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. தாய்மொழி, ஆங்கிலம், அதற்கு அடுத்து மாணவர்கள் விரும்பும் மொழி என்றுதான் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெலுங்கு கன்னடம் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கோடிக்கணக்கில் வசிக்கிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியும். அந்த வாய்ப்பை திமுக அரசு ஏன் மறுக்கிறது? அப்படி மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்லவா?
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திரும்பத் திரும்ப திமுக அரசு கூறுகிறது அதன் மூலம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை இல்லாமல் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே மும்மொழி கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் தான். முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தான். திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது. சில பள்ளிகளில் நான்காவது மொழியாக சமஸ்கிருதம், பிரெஞ்சு ஜெர்மன் போன்ற மொழிகளையும் வைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பட்டியலின் பழங்குடியின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் அல்லவா! அரசு ஒரு கொள்கையை உருவாக்கினால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கொள்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கொள்கை என இருந்தால் எப்படி சமத்துவம் உருவாகும்! சமூக நீதி கிடைக்கும்?
குறைந்தபட்சம் திமுகவினர். தங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலாவது இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதிகளை ஏற்படுத்தி விட்டு ஏழ மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்தாலும், அதை தடுப்பது சமுக அநீதி இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி போட்டு மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்க நினைத்தால். அது இனி வெற்றி பெறாது. இதனை உணர்ந்து தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஜெர்மனியில் கூட்டத்தில் காரை மோதினார்.
ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் நேற்று [சனிக்கிழமை] சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பலியானவர்களில் நான்கு பேர் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்கள், அதில் ஒருவர் துருக்கையை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
புலம்பெயர்ந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டுக்கு படையெடுக்கும் அகதிகள் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, 2024 ஆம் ஆண்டில் 24,941 வெளிநாட்டினர் அந்நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்களே அதிகம்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஸ்திரியாவுக்கு அருகில் உள்ள ஜெர்மனி நாட்டின் முனீச்சில் நடந்த கூட்டத்திற்குள் காருடன் புகுந்ததில் 28 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
- மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக, இணைய தள முடக்கத்தை நீக்க வேண்டும்
விகடன் இணையதளம் முடக்கப்பட்டது கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவை கருத்துச் சுதந்திரத்தை உறுதியாகப் பற்றி நிற்கும் ஒரு ஊடகமாகும். நேற்று இரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்கள் விகடன் இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. சட்டத்துக்குப் புறம்பாக விகடன் இணைய தளம் முடக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசின் ஃபாசிசப் போக்கையே காட்டுகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, 'விகடன் பிளஸ்' என்னும் விகடனின் இணைய இதழின் அட்டையில் ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்ததை விமர்சித்து அந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. உண்மையில் அந்த கேலிச் சித்திரம் கோடிக் கணக்கான இந்திய மக்களின் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது. அதனால் அது சமூக வலை தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது பாஜக ஆதரவாளர்களுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டுத் தலைவர் திரு. அண்ணாமலை விகடனுக்கு எதிராக ஒன்றிய அரசிடம் முறையிட்டதாகவும் , அதற்குப் பின்னரே விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சிக்காரர்களே அரசாங்கத்தின் இணை அதிகார அமைப்பாகச் செயல்படும் இந்தப் போக்கு இந்திய சனநாயகம் குறித்த மிகப்பெரிய கவலையைக் கிளப்புகிறது.
இணையதளங்களை முடக்கும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), 2000- இன் 69A-பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டத்தின் விதிகள் IT (Procedure and Safeguards for Blocking) Rules, 2009 கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த சட்டத்தின் பிரிவு 69A(1) இன்படி ஒரு இணையதளம் முடக்கப்படுவதற்கு முன்பு அதில் வெளியான செய்தியானது தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவுகள், போன்றவற்றுக்கு எதிராக அது இருக்கிறது என்பது குற்றம் சாட்டப்படுபவருக்கு எழுத்துபூர்வமாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.
விதி 8ன் படி, இணையதளத்தை முடக்கும் முன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்; அவர்கள் விளக்கம் தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தடை விதிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால், விகடன் குழுமத்துக்கு அப்படி எந்தவிதத் தகவலும் கொடுக்கப்படவில்லை. இது சட்டத்தை மீறிய செயலாகும்.
விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது, ஊடகச் சுதந்திரத்திற்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகும். எனவே, ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக இணைய தள முடக்கத்தை நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
- வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க செயல்திறன் துறை DODGE நிறுத்தியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதார். அரசின் தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கான நிதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்துவதாக DODGE அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர், பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து கம்போடியாவில், பராகுவே, செர்பியா,தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
- தேசியக் கல்விக் கொள்கையை, மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது
- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுகள் தனிக்கொள்கையை கடைபிடிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதால், ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை வழங்காமல் பல மாதங்களாக மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்று பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபட தெரிவித்திருக்கிறது.
ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத் தான் மத்திய கல்வி மந்திரியின் கருத்துகள் காட்டுகின்றன. மும்மொழித் திணிப்பு என்ற போர் தமிழகத்தின் மீது 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் போரில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் தான் வென்று வருகின்றனர். 1963-ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்த போது, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும்; இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனிக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளன. இப்போதும் கூட தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து இன்னும் செயலாக்கம் செய்யாமல் வைத்திருக்கிறது. இது மாநில அரசின் உரிமை. இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழம்பிக் கொள்ளக் கூடாது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
- முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின
உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள் வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.
"முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அதன் நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் PANIYATRIYAஹென்ட்ரிக்ஸ், 1996 இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
- இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம்
- இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்நிலையில் படத்தை குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வாரங்களில் பல திரைப்படங்கள் வந்தாலும் குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக அதன் 4-வது வாரம் திரையரங்கிள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் நாளை (17.2.2025) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அமரன் வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் கைக்கோர்த்து உள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நாளை (17.2.2025) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
இதைமுன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும்,
நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும்,
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்,
தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய பெருங்கனவை நனவாக்கிய வெற்றி நாயகன்,
தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
- ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர்
தமிழ்நாடு - காசி இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மூன்றாவது வருடமாக தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரெயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரெயில் என்பதால் தமிழக பயணிகள் பெட்டிகளின் கதவுகளை பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதனால் வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இறுதி போட்டிக்கு வந்த 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக மும்பை உள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.
முஜீப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இரண்டாம் பாடலான மண்ட பத்ரம் பாட்லை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கானா பிரான்சிஸ் எழுதி பாடியுள்ளார். இப்பாடல் ஒரு குத்து கானா பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






