என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
    • அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. அந்த கட்சி எங்கள் கைக்கு வரும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு. இது போன்ற கொசுக்களை பற்றியெல்லாம் பேசாதீர்கள். அதற்கான நேரமா இது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ரகசியம் இருப்பதாக கூறுகிறார். யாருடன் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதி. இப்படி தி.மு.க.வுடன் தொடர்பில் இருந்து அந்த நோய் அவரை தொற்றிக் கொண்டுள்ளது. தங்கமலை ரகசியமா? இல்லை சிதம்பர ரகசியமா? என்பதை சொல்லி விட்டு போக வேண்டியது தானே?

    இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார். இது எடுபடாது. அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இந்தியை விரும்பி படிப்பது வேறு. திணிப்பது வேறு. திணிப்பதுதான் தவறாகும். எனவே இந்தி தேவையில்லை என்பது எங்கள் கருத்தாகும். தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
    • வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவி காலம் இன்று முடிவடையும் நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    முக்கிய வழக்குகளை விசாரித்த பிறகு தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • ரன்வீர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கொஞ்ச காலத்துக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேறக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து ரன்வீர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும் ரன்வீர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆபாசமாக பேசுவது நகைச்சுவை அல்ல, இவ்வழக்கில் எவ்வாறு நிவாரணம் கோரமுடியும்? என்று கண்டனம் தெரிவித்தது.

    தொடர்ந்து விசாரணையில் ரன்வீர் முழுமையாக ஒத்துழைப்பார் என்று வாக்குறுதி அளித்தததை அடுத்து இடைக்கால தடையாணை பிறப்பித்து அவரது கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    மேலும் ரன்வீர் தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதி இன்று வெளிநாடு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்ச காலத்துக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேறக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

     

    • அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • பிரதமர் மோடி வரவேற்று அழைத்து சென்றார்.

    கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.

    இது மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கத்தார் அமீர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். இதற்காக குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த அமீரை திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துள்ள நிலையில், கத்தார் அமீர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடி அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் முன்னதாக 2015-ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்தியா வந்திருந்தார்.


    • மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.

    மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் மிக நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்துள்ளது.

    படத்தின் முதல் பாதி சிறு தொய்வாக இருந்தாலும். படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகளும், விறுவிறு திரைக்கதையை கொண்டு அதை சரிக்கட்டியுள்ளனர். சங்கீத் பிரதாபின் நகைச்சுவை காட்சிகளில் திரையரங்குகள் சிரிப்பலையில் அதிருகிறது.

    ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார்.

    திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் 4 நாட்களில் 11.78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    • 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறுவது குறித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது.

    முன்னணி நடிகரான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

    இந்நிலையில் 2026 தேர்தலுக்கான சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி உள்ளது.

    தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து பேசினார். 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறுவது குறித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது.

    2026 சட்டசபை தேர்தலுக்கான கட்சி பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது.
    • மற்ற மூத்த வக்கீல்கள் சார்பில் வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு கடந்த 10-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி, எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது.

    எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழ்நாடு அரசு வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மற்ற மூத்த வக்கீல்கள் சார்பில் வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
    • இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்த நிலையில், பிரயாக்ராஜ் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு இவர்களது தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.
    • அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம். கடந்த ஆண்டு இவர்களது தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.

    அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ள டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது இவர்கள் தயாரிக்கும் 26- வது திரைப்படமாகும்.

    இதை தொடர்ந்து இந்தியில் லயன் மற்றும் சிம்பு நடிக்கும் 51 - வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர் அடுத்து தயாரிக்கும் திரைப்படத்தை பற்றி சில தகவலை கூறியுள்ளார்.

    அதில் அவர் அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அப்படத்தை பெரிய பிரபல இயக்குனர் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார். யார் அந்த இயக்குனர் என்ற தகவல் வெளியாகவில்லை. அது இயக்குனர் வெங்கட் பிரபு வாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய வீரர் கள் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இருக்கிறார். இந்த நிலையில் மோர்னே மோர்கலின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.

    இதை தொடர்ந்து மோர்கல் உடனடியாக துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்தப் போட்டி தொடரில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார். தற்போது மார்னே மார்கலும் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம் என்று கூறி மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
    • பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

    ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் செயல்பட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிரகிருதி லம்சால் என்ற 20 வயது நேபாளை சேர்ந்த மாணவி பல்கலை. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கலிங்கா பல்கலையில் அவர் மூன்றாம் ஆண்டு பி.டெக் பயின்று வந்தார்.

    அதே பல்கலையில் பயின்று வந்த லக்னோவை சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா(21 வயது) என்பவரால் பிரகிருதி தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இவர் பிரகிருதியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஆத்விக்கின் தொடர் தொந்தரவால் மன அழுத்தத்துக்கு ஆளான பிரகிருதி கடந்த மாதமே பல்கலை. மாணவர் மனநல ஆலோசகரிடம் தனது பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் அதீத மன அழுத்தம் காரணமாக பிரகிருதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அதே நாளில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா வெளியூருக்குத் தப்பியோட விமான டிக்கெட் எடுத்துள்ளதும் அம்பலமானது.

    இதற்கிடையே பல்கலையில் பயின்று வந்த நேபாள் நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து புகார் அளித்து வந்தபோதும் யாரும் பதிலளிக்கவில்லை என்று அம்மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராடும் நேபாள் மாணவர்களை நிர்வாக அதிகாரிகள் தாக்குவதும், அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    அதில் பெண் ஆசிரியைகள் நேபாள் மாணவர்களை பார்த்து, "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம்" என்று கூறி அனைவரையும் உடனடியாக பல்கலையை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர். மேலும் பல்கலையில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நிர்வாகம் தங்களை வலுக்கட்டாயமாக வெளிற்றியுள்ளது என்றும் பயணச்சீட்டுகள் இன்றியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் சகோதரர் அழித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் நேபாள் பிரதமர் சர்மா ஒலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து ஒடிசா பாஜக அரசு தலையிட்டு, மாணவர்களை வெளியே அனுப்பிய KIIT-ஐ அதன் முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து KIIT பல்கலைக்கழகம் நேபாள மாணவர்கள் திரும்பி வருமாறு வலியுறுத்தி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.    

    • கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
    • இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    மும்மொழி கொள்கை தொடர்பாக நா.த.க. வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்.

    * கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். பயன்பாட்டு மொழி ஆங்கிலம் தெளிவாக எழுதி இருக்கிறேன்.

    * உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழிகள். இந்தி உட்பட விரும்பினால் கற்போம் என்று போட்டுள்ளேன்.

    * இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    * தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தோர் தமிழ் பேசும் நாகர்கள் என்றார் அம்பேத்கர்.

    * தேவை என்றால் இந்தி படிக்கிறோம். உணவு, மொழி, உடை எல்லாம் அங்கங்கு வாழுகின்ற கால சூழல் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.

    ×