என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bromance"

    • சூட்டிங்கின்போது கார் விபத்து ஏற்பட்டு நடிகர்கள் அர்ஜுன் அசோகன் மற்றும் 'பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
    • 'ப்ரோமான்ஸ்' படப்பிடிப்பானது தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது

    கேரளாவில் படத்தின் சூட்டிங்கின்போது கார் விபத்து ஏற்பட்டு நடிகர்கள் அர்ஜுன் அசோகன் மற்றும் 'பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.

    மலையாளத்தில் நிவின் பாலி- நயன்தாரா நடித்த லவ்- ஆக்ஷ்ன்- ட்ராமா படத்தை இயக்கி புகழ் பெற்ற அர்ஜுன் டி.ஜோஸ் தற்போது இயக்கி வரும் படம் 'ப்ரோமான்ஸ்' (bromance). இதில் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

     

    'ப்ரோமான்ஸ்' படப்பிடிப்பானது தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கொச்சி எம்.ஜி சாலையில் கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்டபோது உணவு டெலிவரி செய்பவரின் இரு சக்கர வாகனத்தில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டெலிவரி நபரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கார் கவிழ்ந்ததால் காரின் உள்ளே முன்பக்கம் இருந்த நடிகர் அர்ஜுன் அசோகனுக்கும், பின்பக்கம் இருந்த சங்கீத் பிரதாப்புக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    விபத்து குறித்து விசாரித்த காவல்துறையிர், காரை வேகமாக ஒட்டியதாக கூறி படக்குழுவை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் படப்பிடிப்பின்போது எந்தவித பாதிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. தொலைந்துப் போன அண்ணனை தேடும் பணிகளில் ஈடுப்படும் போது அவர்கள் சந்திக்கும் எதிர்ப்பாராத பிரச்சனைகள் போன்ற காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.

    மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் மிக நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்துள்ளது.

    படத்தின் முதல் பாதி சிறு தொய்வாக இருந்தாலும். படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகளும், விறுவிறு திரைக்கதையை கொண்டு அதை சரிக்கட்டியுள்ளனர். சங்கீத் பிரதாபின் நகைச்சுவை காட்சிகளில் திரையரங்குகள் சிரிப்பலையில் அதிருகிறது.

    ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார்.

    திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் 4 நாட்களில் 11.78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×