என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.பன்னீர் செல்வம் ஒரு கொசு- ஜெயக்குமார் கடும் தாக்கு
    X

    ஓ.பன்னீர் செல்வம் ஒரு கொசு- ஜெயக்குமார் கடும் தாக்கு

    • இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
    • அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. அந்த கட்சி எங்கள் கைக்கு வரும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு. இது போன்ற கொசுக்களை பற்றியெல்லாம் பேசாதீர்கள். அதற்கான நேரமா இது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ரகசியம் இருப்பதாக கூறுகிறார். யாருடன் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதி. இப்படி தி.மு.க.வுடன் தொடர்பில் இருந்து அந்த நோய் அவரை தொற்றிக் கொண்டுள்ளது. தங்கமலை ரகசியமா? இல்லை சிதம்பர ரகசியமா? என்பதை சொல்லி விட்டு போக வேண்டியது தானே?

    இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார். இது எடுபடாது. அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இந்தியை விரும்பி படிப்பது வேறு. திணிப்பது வேறு. திணிப்பதுதான் தவறாகும். எனவே இந்தி தேவையில்லை என்பது எங்கள் கருத்தாகும். தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×