என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் 150 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக வழித்துணையே மற்றும் ஏன் டி விட்டுப் போன பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வழித்துணையே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை.
- நியாயமான விலையில் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளது.
மருத்துவமனை மருந்தகங்களில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்குமாறு நோயாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது, முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை. ஆனால் மலிவு விலையில் மருத்துவ சேவை மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய மாநில அரசுகள் தவறிவிட்டன. ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை, குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த தோல்வி, தனியார் மருத்துவமனைகளுக்கு வசதி செய்து கொடுத்து ஊக்குவித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பொதுமக்களை சுரண்டுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக கட்டாய உத்தரவுகளை பிறப்பிப்பது நல்லதல்ல, ஆனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தது.
- 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு, ரூ. 54 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர்களை அமைச்சர் இ.பெரியசாமி இன்று வழங்கினார். இதில் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு துறை சார்பில் ரூ. 4.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை உள்பட ஆறு துறைகள் சார்பில் 257 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 885 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சேம நிதியிலிருந்து முதலமைச்சரால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப்படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படாததால் வருகிற தேர்தலில் இப்பிரச்சினை எதிரொலிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த எதிரொலியும் வராது. காரணம் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும். ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு என்றுமே தி.மு.க. பாதகமான முடிவை எடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
- 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும்.
அமெரிக்கா வரிவிதிப்பு
டொனால்டு டிரம்ப் உடைய ஆளுகையின் கீழ் உள்ள அமெரிக்கா பிற நாடுகள் மீது கடுமையான வரிக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 03) கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்தது.
முன்னதாக கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்டு டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.
பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.

இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இந்த புதிய வரிவிதிப்பு இன்று (மார்ச் 04) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் நிலவுகிறது.
சீனா பதிலடி
இந்நிலையில் இன்று (மார்ச் 04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10% முதல் 15% வரி விதிப்பை அறிவித்துள்ளது.
சோயாபீன், சோர்கம் (sorghum), பன்றிக்கறி, மாட்டுக்கறி, கடல்சார் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு சீனா 10 சதவீத வரியை அறிவித்துள்ளது.

மேலும் கோழிகள், கோதுமை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனடா - மெக்சிகோ எதிர்வினை
இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடா, மெக்சிகோவும் இறங்கியுள்ளது. நேற்று இதுதொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா தனது போக்கை தொடர்ந்தால் 20 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல்) 25 சதவீத வரி விதிக்கப்படும்.
மேலும் 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் மிதமிஞ்சிய வரிவிதிப்பு தொடர்பாக நேற்று பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எங்களிடம் பிளான் B, C, D உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில்(WTO) சீனா புகார் கொடுத்துள்ளது.
- தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியல், வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் என யார் பெயராக இருந்தாலும் பொதுத்தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
- தரவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இனிமேல் பெயர் வெளியிடப்படுவது தடுக்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மோடி அரசு பலவீனப்படுத்த முனைப்பு காட்டுகிறது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் "ஒரு பக்கம் கடந்த பல வருடங்களாக தவறான தகவலை அளிக்கும் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மறுபக்கம், தரவு பாதுகாப்பு சட்டம் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது.
மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "பொதுத்துறைகளான ரேசர் கார்டுகள், 100 நாள் வேலை திட்டம், பொது நலத்திட்டத்தில் பயன்பெறும் மக்கள், தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் அல்லது வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிய தொழில் அதிபர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பெயர் பொது இடத்தில் வெளியிப்படப்பட வேண்டும்.
ஆனால், மோடி அரசு தரவு பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்த முனைப்பு காட்டுகிறது. தரவு பாதுகாப்பு காரணமாக பெயர்கள் பொது வெளியில் வெளியிடப்படாது" என்றார்.
- "தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம்" என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர்.
- நாம் ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம்" என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர், சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர், அய்யா வைகுண்டர்.
ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அய்யா அவர்களின் 193வது அவதார தினமான இன்று அவர்தம் திருப்பாதங்களை போற்றி வணங்குகிறேன்.
நாம் ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழ வேண்டும் எனும் அய்யா வழியை பின்பற்றும் அனைவருக்கும் இந்நன்னாளில் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.
- ரோகித் 11 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 14 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது.
2023-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 11 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)
நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)
இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 11 (நவம்பர் 2023 - மார்ச் 2025)
- உத்தரபிரதேச சட்டமனறத்தில் இருந்த எச்சில் கறைகளை கண்டு சபாநாயகர் அதிர்ச்சியடைந்தார்.
- எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா, எச்சில் கறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,
எச்சில் கறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சதீஷ் மஹானா அறிவுறுத்தினார்.
மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
2017 ஆம் ஆண்டு பணியின்போது அதிகாரிகள் பான் மசாலா போன்ற பொருட்களை மெல்லக் கூடாது என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
- சீமான் தலைமையில் செங்கல்பட்டில் பிற்பகல் 4 மணிக்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தெலங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி, அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. அதேநேரம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி 16-ந்தேதி செங்கல்பட்டில் பேரணி நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டில் பிற்பகல் 4 மணிக்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பி விலை ரூ.3,151 ஆக நிர்ணயம்.
- 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு பருவத்திற்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பி விலை ரூ.3,151 ஆகவும், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267 ஆகவும், 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20 ஆகவும், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், துபாயில் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.
ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கோனோலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- 10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 8-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






