என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • 10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 8-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

    * மீனவர்கள் பிரச்சனைக்கு இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

    * கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    * தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆட்சியர், எஸ்.பி.யை மிரட்டுகிறார்.

    * எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படும்.

    * தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும்.

    * எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்.

    * தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறியதா? என கேள்வி எழுப்பினார்.

    • பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தலாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார்.

    கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தலாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார். அவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு.

    மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற எம்.பி. தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என தகவல்கள் வெளியானது.

    இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால் மத்திய அமைச்சர் அமித் ஷா தொகுதிகள் குறைக்கப்படாது என்று கோவையில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

    ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை ( மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக் கல்கவிஞர் மாளிகை 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தார். அவர் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள அரங்கை நேரில் பார்வையிட்டார்.

    ஒவ்வொரு கட்சிக்கும் அமைக்கப்பட்டுள்ள இருக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்றும் தமிழகத்தின் நலன் கருதியும் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்க இருக்கிறார்.

    • சேப்பாக்கம் திருவல்லிகேணி சிறு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஏசி பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் மேலும் 9 மினி அரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் 4.068 ஏக்கர் பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தின் பயிற்சிக் கூட கட்டடம் 396 சதுர மீட்டர் பரப்பளவில் வரவேற்பு பகுதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள், பொருட்கள் வைப்பறை, மேலாளர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.

    மேலும் சிறு விளையாட்டரங்கத்தில் திறந்த வெளி பார்வையாளர் மாடம் 265 நபர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் 2 கிரிக்கெட் டர்ப் அமைக்கப்பட்டுள்ளது.

    அதே போல மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவற்றை திறந்து வைத்தார். முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாயும், 6 மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், 3 மாதத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், மாதம் ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதலமைச்சர் திறந்து வைத்து கிரிக்கெட் டர்ப்பில் கிரிக்கெட் விளையாடினார். உடன் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி சென்னைசேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதே போல மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 கோடி ரூபாயில் கட்டுப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம். மொத்தமாக இன்று 12 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அரசு சார்பாக விளையாட்டுத்துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதே போல மதுரை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 50 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்கள். மீதம் உள்ள தொகையை அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சேப்பாக்கம் திருவல்லிகேணி சிறு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஏசி பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்கி, 2 கிரிக்கெட் டர்ப் பார்வையாளர்கள் மாடம் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தில் உள்ளது என தெரிவித்தார். மற்ற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் மேலும் 9 மினி அரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 22 மினி அரங்கம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைந்தது 25 மினி அரங்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளோம். அந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க உள்ளோம்.

    இந்த விளையாட்டு அரங்கத்தை விளையாட்டு வீரர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆனந்த அம்பானியின் வந்தாரா வனவிலங்கு மையத்தை பார்வையிட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • வந்தராவில் உள்ள வன விலங்குகளுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டார்.

    மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆனந்த அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

    2,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கும், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளை மீட்டு வந்தாரா பாதுகாத்து வருகிறது.

    வந்தாரா அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது

    வந்தராவில் உள்ள வன விலங்குகளுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பிரதமர் மோடி, ஒராங்குட்டான்கள், ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி உணவு அளிக்கிறார்.

    • அஸ்திரம் திரைப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    நடிகர் ஷாம் அடுத்ததாக அஸ்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தின் ஷாம் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

    நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

     


    இந்த நிலையில், அஸ்திரம் படத்திற்கு தணிக்கு குழு சான்று வழங்கியுள்ளது. அதன்படி அஸ்திரம் படத்திற்கு ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
    • மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் 2,025 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வேல் வழங்கினர். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற முதல்வரின் கூற்று பொய்யாகும்.

    * முதலமைச்சரின் எண்ணம் நடக்காது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.

    * அ.தி.மு.க. வலுப்பெற்றுள்ளது, அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் மன்னராட்சி மீண்டும் அமைவதற்கு நாம் துணை நிற்க கூடாது.

    * வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தலாக இருக்க வேண்டும்.

    * எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களை தங்களது குழந்தைகளாக பார்த்தார்கள்.



    * மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    * மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.

    * அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வரக்கூடாது.

    * அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. இந்த நிலை எந்த கட்சியிலும் இல்லை.

    * 234 தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்திய கட்சி அ.தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கால்நடை பூங்கா திட்டத்தை முடக்கினர்.

    * ஏழைகளுக்காக கொடுக்கப்படும் திட்டத்தில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி?

    * குடிமராமத்து திட்டத்தை கூட கைவிட்டு விட்டனர்.

    * மக்களுடைய வரிப்பணத்தை தான் மக்களுக்கு கொடுக்கின்றனர்.

    * அ.தி.மு.க. போராடும் என தெரிவித்த பின்னரே மகளிர் உரிமை தொகையை வழங்கினர் என்றார்.

    • சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
    • நடவடிக்கை எடுக்க தவறினால் காவல்துறையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.

    நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஐயனார் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில்,

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தவறாக சித்தரித்து, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது 'குற்றவாளி' என்றும் சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 'சுவரொட்டி அடித்து ஒட்டிய' திராவிடர் பெரியார் கழக தலைவர் மா.பா.மணி அமுதன் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட வேண்டும் என்றும், தாங்கள் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் காவல்துறையை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வடக்கில் எந்த மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது என்பதை அவர்கள் ஏன் முதலில் கூறட்டும்.
    • எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என கனிமொழி கேள்வி

    இந்தி திணிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட எக்ஸ் பதிவு தேசிய அளவில் பேசுபொருளானது.

    மும்மொழி கொள்கை குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று பதிவிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு மறுக்கிறீர்கள்? என்று ஒருதலைப்பட்சமான கொள்கைகளை பின்பற்றுபவர்கள் கேட்கிறார்கள். சரி, வடக்கில் எந்த மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது என்பதை அவர்கள் ஏன் முதலில் கூறட்டும். அவர்கள் அங்கு இரண்டு மொழிகளை முறையாகக் கற்றுக் கொடுத்திருந்தால், நாம் மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?" என்று பதிவிட்டிருந்தார்.

    அதை பதிவை பகிர்ந்த பகிர்ந்த அண்ணாமலை, "மு.க.ஸ்டாலின் அவர்களே, கல்வியில் சமத்துவத்திற்காக புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

    தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு வேறு தரத்தை அனுமதிக்கும் அதே வேளையில், எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மட்டுமே நீங்கள் என்றென்றும் திணிக்க விரும்பும் கல்வி முறை ஒருதலைபட்சமாக உள்ளது. உங்கள் வசதிக்கேற்ப எங்கள் கேள்வியை நீங்கள் குறைத்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    "உங்கள் குடும்பத்தினரும் உங்கள் அமைச்சர்களும் நடத்தும் தனியார்ப் பள்ளிகள் உட்பட தனியார் சிபிஎஸ்இ/மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில், எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?" என்பதே எங்கள் கேள்வி.

    வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நீங்கள் குறிப்பிடுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலப் புலமை இருக்கிறது?

    மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் பகுதிநேர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மறுப்புடன் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தி வருவதால், ஒருவரின் மொழிப் புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், எங்கள் III, V, மற்றும் VIII வகுப்பு மாணவர்களின் தமிழ் மொழிப் புலமை குறித்த சமீபத்திய ASER கிராமப்புற 2024 அறிக்கையைப் படிக்க நேரம் ஒதுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    மு.க. ஸ்டாலின் அவர்களே ஒருவரின் மொழிப் புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், 3, 5, மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் எங்கள் மாணவர்களின் தமிழ் மொழித் திறன் குறித்த சமீபத்திய ASER கிராமப்புற 2024 அறிக்கையைப் படிக்க நேரம் ஒதுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பகுதி நேரப் பள்ளிக் கல்வி அமைச்சர், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், அண்ணாமலையின் பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், "பாஜக எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும் - டாக்டர் பரகலா பிரபாகர் அதை The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் அம்பலப்படுத்தினார். பாஜக தனது பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு புள்ளிவிவரங்களை தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டி, எண்களைத் திரிகிறது.

    உங்கள் ASER தரவு? அது எப்படி சூழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், அதனால்தான் கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து நாங்கள் எங்கள் சொந்த கணக்கெடுப்பை நடத்துகிறோம்.

    உங்கள் 2025 பொருளாதார ஆய்வறிக்கை கூட, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற மைல்கல் திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாட்டைப் பாராட்டியுள்ளது. எழுத்தறிவில் சிரமப்படும் பாஜக ஆளும் மாநிலங்களைப் போலல்லாமல், நாங்கள் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம்.

    தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள் - அப்படியானால், உங்கள் அரசாங்கம் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது? உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், எங்களுக்கு உபதேசம் செய்வதற்குப் பதிலாக, இந்த நிதியை விடுவிக்குமாறு உங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள்.

    நீங்கள் நியாயம் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVs) ஜெர்மன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தொடர்ந்து திணித்து, மாணவர்களுக்கு உலக அறிவை தடுத்து, பாஜகவின் பிரிவினைவாத சித்தாந்த அஜெண்டாவிற்கு முன்னிறுத்துகின்றன

    நீங்கள் உண்மையிலேயே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பது பற்றிய தரவை எங்களுக்குத் தரவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று பதிவிட்டிருந்தார்.

    இதனையடுத்து கனிமொழியின் எக்ஸ் பதிவை பகிர்ந்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்திய அரசு வெளியிட்ட தரவு தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதாக இருந்தால், அதை ஒரு சார்புடையது என்று நீங்கள் கூறுவீர்கள். ஒருவேளை அதே தரவு பாராட்டுக்குரியதாக இருந்தால், அதை முரசொலி & தினகரன் இதழின் முதல் பக்கத்தில் வெளியிடுவீர்கள்.

    உங்கள் சகோதரரின் ஆட்சியில் இன்று தமிழ்நாட்டில் கல்வித் தரம் மோசமடைந்து வருவதை முடிவுகள் சுட்டிக்காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவை தேசிய கல்விக்கோளாகி 2020/ சமக்ர சிக்ஷாவில் கூறப்பட்டவைதான். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரைகளில் பல, தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். திமுகவைப் பொறுத்தவரை, அரசியல் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை விட முன்னுரிமை பெறுகிறது.

    இந்த கல்வியாண்டு முதல் பி.எம்.ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புமாறு திமுக அரசை தமிழக பாஜக கட்டாயப்படுத்தியதா? நீங்களும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் ஊடகங்கள் முன் வேறுவிதமாகக் கூறினாலும், பி.எம்.ஸ்ரீ திட்டம் சமக்ர சிக்ஷாவின் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.

    உங்கள் சகோதரனும் மருமகனும் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். குறைந்தபட்சம் நீங்கள் பதிலளிக்க விரும்புவீர்களா?

    உங்கள் குடும்பத்தினரும் உங்கள் அமைச்சர்களும் நடத்தும் தனியார் பள்ளிகள் உட்பட தனியார் CBSE/ மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.


    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
    • தாய் உயிரிழந்த நிலையிலும் சுனில்குமார் என்ற 12-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் இத்தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுதுகின்றனர்.

    இந்த நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் சுனில்குமார் என்ற 12-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இதனை சுட்டிக்காட்டி சில புகைப்படங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இதுதான் தமிழ்ச் சமூகம்!

    கல்விதான் நம் உயிரினும் மேலானது!

    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

    சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!. என்று கூறியுள்ளார். 



    • கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
    • அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

    சொந்த நலனுக்காக அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட்டார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்த நிலையில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அ.ம.மு.க. காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது.

    * கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

    * அ.ம.மு.க. கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கும் என்று தெரிந்துதான் நிர்வாகிகள் விலகுகின்றனர்.

    * டி.டி.வி.யிடம் இருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று அ.ம.மு.க. நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

    * டி.டி.வி.தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார்.

    * அ.ம.மு.க. தொண்டர் பெயர்களை வெளியிட்டால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளதா? பலமாக உள்ளதா? என டி.டி.வி. புரிந்துகொள்வார்.

    * அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அது குறித்து டி.டி.வி. கவலைப்பட வேண்டாம் என்று கூறி உள்ளார்.

    ×