என் மலர்
நீங்கள் தேடியது "AMMK"
- ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.
- தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும்.
திருப்பூர்:
அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
பதவி ஆசை, சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க., தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.
ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை தவறாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க., அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை. இது நட்பு ரீதியானது.
53 ஆண்டாக அ.தி.மு.க.வில் இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர். அவர் கோபத்தில் த.வெ.க.வுக்கு சென்றிருக்கமாட்டார். சிந்தித்து நிதானமாகவே முடிவெடுத்திருப்பார்.
செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை. விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது அவருக்கு புரியவில்லை. 16-ந்தேதி ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள்.
தமிழகம் அமைதி பூங்கா. இங்கு சாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடவுளின் பெயரையோ மதத்தின் பெயரையோ சாதியின் பெயரையோ கூறி தேவையற்ற பிரச்சனைகள் கலவரங்கள் உருவாகாமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதனை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும். நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5-வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் 4 முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும்.
சீமான் தனித்துப்போட்டியிடுவார். தி.மு.க., அ.தி.மு.க., விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை.
கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அ.ம.மு.க.வில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
- இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அ.ம.மு.க. உறுதியாக இருக்கிறது.
- தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செய லாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை அமித்ஷா தான் இயக்குகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அ.ம.மு.க. அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை.
அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு. செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அவரது நிலைப்பாட்டை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
நான் நட்புடன் நெருங்கி பழகியவர்களில் அவரும் ஒருவர். அவரது முடிவை பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்காது. அவரை பற்றி விமர்சிப்பது அவருக்கு நான் கொடுக்கும் மரியாதையை குறைப்பதாக இருக்கும்.
மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திக்க மாட்டேன். அவரும் என்னை அழைக்கமாட்டார். இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அ.ம.மு.க. உறுதியாக இருக்கிறது. அதை இன்று ஜெயலலிதா வினைவிடத்தில் உறுதிமொழியாக ஏற்றோம்.
தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் சைதை ஜி.செந்தமிழன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். வேதாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 10.12.2025 முதல் 18.12.2025 வரை விருப்பமனு பெறப்படுகிறது
- விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி ஆகியவை அப்படியே தொடருமா, மாறாக இவற்றில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விலகுமா என யூகங்களும், பேச்சுகளும் இப்போதே அடிபட தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவில்,
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
- டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.
நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?
பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
- 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.
சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.
விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.
பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
- துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல என்று கூறினார்.
மேலும் டி.டி.வி. தினகரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
* கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.
* கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல. சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
* ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.
* அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை.
* எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
* பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
* துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை.
* நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார்.
* டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.
* அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.
* 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம்.
* தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்?
* எடப்பாடி பழனிசாமியை தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது என்று கூறினார்.
- வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும்.
- வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.
தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
75 ஆண்டுகால மற்றும் 50 ஆண்டு கால கட்சிக்கு இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாகிவிட்டது. வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும்.
நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை. உறுதியாக கூறுகிறேன். வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.
அ.தி.மு.க ஒன்றிணைப்புக்கான 10 நாட்கள் கெடு முடிந்தது குறித்து அதற்கான விளக்கத்தை செங்கோட்டையன் அளிப்பார்.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது அது அவரது விஷயம் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது.
மதுரை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
* எடப்பாடி பானிசாமி அரசியல் செய்வதை சுட்டிக்காட்டினேனே தவிர, தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
* எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
* கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது என்றார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு,
எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து சுலபமாக வெற்றி பெற்றது என்றார்.
- ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன்.
டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. டிடிவி தினகரன் ஏன் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார் என அவரைச் சொல்லச் சொல்லுங்கள்.
திமுக ஆட்சியில் இருக்க கூடாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதிமுக மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா மேலும் கூறியதாவது:-
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல், இது அதிமுக கட்சி நலனுக்கு உகந்தது அல்ல.
மீண்டும் அதிமுகு ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் தர போகிறோம்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தி கட்சிக்கு அழைத்துவர முயற்சித்தவர் ஜெயலலிதா.
திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு.
- எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில்,
செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு அல்ல, அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார்.
- கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
- கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
மதுரை :
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை இணைக்க அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார்.
* தேவையின்றி யாரையும் சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
* கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
* கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
* அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம்.
* கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை.
* விஜயுடன் கூட்டணி என பேசுவது தவறானது.
* தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக்கூறினேனே தவிர அவருடன் இணையப்போகிறேன் எனக்கூறவில்லை.
* அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.






