என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான்' - NDA கூட்டணியில் இணைந்தபின் டி.டி.வி.தினகரன் பேட்டி
- தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.
- விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தமிழகம் வருகை தந்துள்ளார். இவர் தான் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். மக்கள் விருப்பம் நல்லாட்சியை கொடுக்க இந்த கூட்டணியில் சேருகிறோம். எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே. விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
தமிழகத்தில் நல்லாட்சி உருவாக நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் மக்களாட்சி அமைய நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






