என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.
- தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.
டெல்லி தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மன அமைதியை தேடி வருகிறார்.
அந்த வகையில் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்த்கர் கிராமத்தில் உள்ள தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.
இந்நிலையில் நேற்று இவ்விடத்துக்கு செல்ல கான்வாய் வாகனங்கள் சூழ அரவிந்த் கெஜ்ரிவால் காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த வருடம் கெஜ்ரிவால் உதவியாளரால் அவமதிக்கப்பட்டதாகப் பரபரப்பைக் கிளப்பிய ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் கெஜ்ரிவாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "முழு உலகையும் விஐபி கலாச்சாரத்திற்காக விமர்சித்த கெஜ்ரிவால், இன்று டொனால்டு டிரம்பை விட பெரிய பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்" என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
- செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்து வருகிறார்.
- இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவும் உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைக்கவும் உள்ளார்.
இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜிவி பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'மெண்டல் மனதில்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். அவருடைய ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் விமர்சிக்கப்பட்டது.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் அவரது எதிர்காலம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டு வருகிறது. நேற்றைய அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய போட்டிக்குப்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் "ரோகித் சர்மாவின் ஃபார்ம், அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லுங்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கவுதம் கம்பீர் பதில் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக நான் என்ன சொல்ல முடியும்?. நாங்கள் முற்றிலும் பயமில்லாத மற்றும் தைரியமான அணுகுமுறையை விரும்புகிறோம்.
கேப்டன் இதுபோன்ற துடிப்புடன் பேட்டிங் செய்யும்போது, டிரெஸ்ஸில் ரூமில் சிறந்த சிக்னலை கொடுக்கிறது. நீங்கள் ரன்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் விளையாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் இடையிலான வேறுபாடு.
நீங்கள் புள்ளி விவரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் அப்படியில்லை. அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். நாங்கள் நம்பர் அல்லது சராசரியை பார்ப்பதில்லை. கேப்டன் முதன் நபராக தன்னுடைய கையை தூக்கும்போது (செயல்பாட்டில் முதன் நபராக இருக்கும்போது) டிரெஸ்ஸிங் ரூமில் அதைவிட சிறந்ததாக ஏதும் இருக்க முடியாது" என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் நான்கு தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
- சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.
அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.
சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.
இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
- சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில் விழாக்களில் சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், புதுவை திருமலையராயன்பட்டினத்தில் உள்ள பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணையின் முடிவில், கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது.
- மணிப்பூரில் இன்று மதியம் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. அடுத்ததாக மதியம் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டது.
- பெருசு படத்தை கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
- பெருசு படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்பொழுது சூர்யாவின் 45 திரைப்படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். ஸ்டோன் பென்ச் நிறுவனம் இதுவரை 15 திரைப்படம் தயாரித்துள்ளது
தற்பொழுது அவர்கள் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது அவர்கள் தயாரிக்கும் 16- வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார்.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடைப்பெறவுள்ளது.
இந்நிலையில், பெருசு படத்திற்கு தணிக்கை குழுவினர் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக நடிகர் வைபவ், நடிகர் சுனில், நடிகை நிஹரிகா, தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ஜூம் காலில் பேசிய ப்ரோமோஷன் விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
இப்படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசிக்கும் குடும்ப படமாக இருக்கும் என்று அந்த வீடியோவில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காசாளரின் செயலை பெண்ணின் மகன் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது அவரது செல்போனை பறிக்க காசாளர் முயன்றுள்ளார்.
- தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை அலிஸ்பா மீது போலீசார் பூட்ஸ் காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை நஜ்மா கானம் என்ற இஸ்லாமிய பெண்மணி தனது கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்க வந்தார். வயதான காரணத்தால் அப்பெண் துணைக்கு உடன் தனது மகனையும் அழைத்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு பணம் வழங்க முடியாது என்று வங்கியின் காசாளர் மனோஜ் குமார் மறுத்துள்ளார். கணக்கில் உள்ள பணத்தை தர மறுப்பது ஏன் என பெண்ணும் அவரது மகனும் கேட்க, காசாளர் மனோஜ் குமார் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.
காசாளரின் செயலை பெண்ணின் மகன் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது அவரது செல்போனை பறிக்க காசாளர் முயன்றுள்ளார். மேலும் வங்கியின் மேலாளர் அறைக்கு பெண்ணும் அவரது மகனும் இதுகுறித்து புகார் அளிக்க சென்றனர். அங்கும் வந்த காசாளர் மனோஜ் குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இஸ்லாமியர் ஒருவருக்கு அவரது கணக்கில் இருக்கும் பணத்தை தர அரசு வங்கி ஒன்று மறுத்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் மாவட்டத்தில் நாகாவான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இணைய மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் இஸ்லாமியர் ஒருவர் வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு கட்டிலில் தனது தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை அலிஸ்பா மீது போலீசார் பூட்ஸ் காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் தாய் அவர்களை எதிர்த்தபோது அவரையும் வீட்டை விட்டு போலீசார் வெளியே தள்ளினர்.
இந்தச் சோதனையின்போது பெண் போலீஸ் யாரும் உடன் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட 2 போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் என்றும் குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
- அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்த நிலையில் 56 கட்சிகள் பங்கேற்றன.
இக்கூட்டத்தில், 2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் 1977 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிப்பு.
- ரோகித் சர்மா 2 இடங்கள் சரிவு.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதியில் அரைசதமும் விளாசினார். இதனால் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இவர் வங்கதேச அணிக்கு எதிராக சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக 46 ரன்களும் சேர்த்தார்.
3 லீக் ஆட்டங்கள், அரையிறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ரோகித் சர்மா 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக 41 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 15 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 28 ரனகளும் அடித்தார்.

தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிராக 56 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 79 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 46 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2-வது இடத்திலும் (அதே இடத்தில் நீடிப்பு), அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 6-வது இடத்திலும் (ஒரு இடம் முன்னேற்றம்), நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 7-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), இலங்கை வீரர் அசலங்கா 9-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), ஆப்கானிஸ்தான் வீரர் ஜத்ரன் 10-வது இடத்திலும் (13 இடங்கள் முன்னேற்றம்) உள்ளனர்.
- ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
- நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது.
* ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
* அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
* தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை.
* நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
* கச்சத்தீவு, காவிரி, நீட் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்த்தது போல் இதனையும் விட்டு விடாதீர்கள்.
* 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 848 எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்.
* நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா என்ற கமல் பாடலைப்போல் தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது என்று கூறினார்.
- மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
- முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.
இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள் வருமாறு:-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் 7.2 என்ற தற் போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். தீர்மானத்துக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி: முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன்: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நட வடிக்கை குழு"வை விசிக வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன்: ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: விகிதம் என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சினையில்லை. வட மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சினை.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2 சதவீதம் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ: அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு ஆகும். தமிழகத்தின் உரிமையை எந்த கால கட்டத்திலும் யாராலும் விட்டுக் கொடுக்க முடியாது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. நம் மாநிலத்தின் பிரச்சினை ஆகும். இதை அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும்.
தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ்: மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியாகத்தான் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை பார்க்கிறோம்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு: தொகுதி மறுசீரமைப்பின் பிரச்சனையை உணர்ந்து முதல் முதலாக குரல் கொடுத்தது முதலமைச்சர் ஸ்டாலின்தான்.
மனிதநேய ஜனநாயக கட்சி, தமிமுன் அன்சாரி: தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.
உலகத் தமிழர் பேரமைப்பு, பழ நெடுமாறன்: எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநில முதலமைச்சர்களிடம் பேசி இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும்.
புரட்சி பாரதம், ஜெகன் மூர்த்தி: தமிழ்நாட்டில் தொகுதிகளில் எண்ணிக்கை குறைந்தால் பட்டியல் சமூக மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.






