என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
    • நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது.

    * ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    * அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?

    * தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை.

    * நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    * கச்சத்தீவு, காவிரி, நீட் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்த்தது போல் இதனையும் விட்டு விடாதீர்கள்.

    * 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 848 எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்.

    * நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா என்ற கமல் பாடலைப்போல் தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது என்று கூறினார்.

    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
    • முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள் வருமாறு:-

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் 7.2 என்ற தற் போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். தீர்மானத்துக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி: முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன்: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நட வடிக்கை குழு"வை விசிக வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன்: ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: விகிதம் என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சினையில்லை. வட மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சினை.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2 சதவீதம் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ: அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு ஆகும். தமிழகத்தின் உரிமையை எந்த கால கட்டத்திலும் யாராலும் விட்டுக் கொடுக்க முடியாது.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. நம் மாநிலத்தின் பிரச்சினை ஆகும். இதை அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும்.

    தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ்: மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியாகத்தான் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை பார்க்கிறோம்.

    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு: தொகுதி மறுசீரமைப்பின் பிரச்சனையை உணர்ந்து முதல் முதலாக குரல் கொடுத்தது முதலமைச்சர் ஸ்டாலின்தான்.

    மனிதநேய ஜனநாயக கட்சி, தமிமுன் அன்சாரி: தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.

    உலகத் தமிழர் பேரமைப்பு, பழ நெடுமாறன்: எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநில முதலமைச்சர்களிடம் பேசி இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும்.

    புரட்சி பாரதம், ஜெகன் மூர்த்தி: தமிழ்நாட்டில் தொகுதிகளில் எண்ணிக்கை குறைந்தால் பட்டியல் சமூக மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.

    • முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 2-வது அரைஇறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

    நேற்று துபாயில் நடைபெற்ற முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று 2-வது அரைஇறுதி போட்டி நாளை லாகூரில் நடக்கிறது. இதில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா-ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    • இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
    • தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    தஞ்சாவூர்:

    குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான கணூரி பார்டரில் சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை 2024, நவம்பர் 26-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்.

    சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் இன்றுடன் (5-ந்தேதி) 100 நாட்களை எட்டியுள்ளது. இவரது போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு உடனடியாக நீதி வழங்க கோரியும், சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் இன்று (புதன்கிழமை) காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தை தொடங்கி வைத்து சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க வேண்டும், இதனை வலியுறுத்தி சண்டிகரில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் தலைமையிலான விவசாயிகள் பேரணியை அரியானா மாநில எல்லையில் துணை ராணுவப்படை தடுத்து நிறுத்தியது.

    அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனாலும், தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டரை கொண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.

    இதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி, தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாடகி கல்பனா, கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்த கல்பனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு, கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாடகி கல்பனா சுயநினைவுக்கு திரும்பியாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பாடகி கல்பனா தூக்க மாத்திரை சாப்பிடத்தையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    உலகளவில் வசூலை குவித்து வரும் 'டிராகன்' திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.



    நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியது தொடர்பாக அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என்ன ஒரு எழுத்து அஷ்வத்... அற்புதம்.... என்று ரஜினி சார் சொன்னார்.

    நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து படத்தை பற்றி பேசனும். இது இயக்குநர் ஆகணும்னு கஷ்டப்படுற ஒவ்வொரு உதவி இயக்குநர்களேட கனவு! கனவு நிறைவேறிய நாள் இன்று என்று கூறியுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார்.
    • இந்தப் படத்திற்கு கிரண் ஜோஸ் இசையமைத்துள்ளார்.

    ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'லீச் 'திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார்.

    இந்தப் படத்தை புக் ஆஃப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் டி சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், படத்தொகுப்பு பணிகளை ஆல்வின் டாமி மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ரஃபீக் அஹமத், விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா எழுத பாடகர்கள் ஹரிச்சரன், கீர்த்தனா மற்றும் ஸ்மிதா பாடியள்ளனர்.

    லீச் திரைப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஜாலி டேவிசன் சி.ஜே. மேற்கொண்டுள்ளார். நடனம் -ஷெரிப் மாஸ்டர், ஷிபு கவனிக்க, சண்டைப் பயிற்சியை டேஞ்சர் மணி வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ராஜூ கோவிலகம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.எஃப்.சி. ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.

    இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும் போது, "இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்போம் ரசிப்போம் கேட்கிறபோதும் ரசிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது .ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா? இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று. படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஓட்டல்களில், நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம்.

    இங்கே அருமையாக நிஜாம் பாடினார். அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்களை அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள்.

    இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள். ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை. இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது. தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இந்த நிலையில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 

    • ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
    • அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

    இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடன் தோளோடு தோள் நின்று போராடும் என்று அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயகக் கோட்பாடுகளை உளமாரக் காக்க விரும்பினால், ஒன்றிய அரசு கீழ்க்கண்டவற்றைத் தான் செய்ய வேண்டும்.

    1. ஜனநாயகத்தின் ஆணிவேர் 'சுதந்திரமான மற்றும் நியாயமான" தேர்தல் ஆகும் (free and fair elections) தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

    இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் Delimitation commissionஇல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும் முக்கிய உறுப்பினராக இருப்பார். ஒன்றிய அரசு தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர்கள் Delimitation commissionஇல் பாரபட்சம் இன்றிச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும்?

    2. நம் அரசியல் சாசனச் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய அரணாக விளங்குவது நீதித் துறை. அத்தகைய ஜனநாயக முக்கியத்துவம் வாய்ந்த நீதித் துறையில், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் போதிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். கொலிஜியம் பரிந்துரைக்கும் அனைத்து நீதிபதிகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வதில்லை என்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். Delimitation commissionஇல் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை வகிப்பார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    3. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறை, எந்த அச்சுறுத்தலும் இன்றிச் சுதந்திரமாகச் செயல்படும் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் CBI, IT, ED போன்ற புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

    4. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் கூட்டணி மற்றும் தேர்தல் கணக்குகளை விடுத்து, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வரையறுக்கப்பட்ட நமது அரசியல் அமைப்புச் சாசனத்தில் ஒன்றியத்தை" (அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்) பலம் பொருந்தியதாகவும், "மாநிலங்களைச் சற்று பலவீனமாகவும் பல விவாதங்களுக்குப் பிறகு தெரிந்தே அமைக்கப்பட்டிருக்கிறது. It was a conscious decision to adopt it as a federal constitution with an unitary bias, காலக்கட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது பல இடங்களில் பிரிவினைவாதப் போக்குகள் நிலவின என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழ்நிலையில் இந்தியத் திருநாடு தற்போது ஒரு முதிர்ச்சி அடைந்த மற்றும் நிலையான ஜனநாயகமாகப் பரிணமித்து விளங்குகிறது. India has evolved into a matured and stable democracy குழந்தைகள் பெரியவர்களாக வளரும் வரையில்தான் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடுகளும் அவசியம். ஓரளவுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு. தேவையான சுதந்திரம் கொடுத்தால்தான் குடும்பம் ஒற்றுமையாக நிலைத்திருக்கும். அதேபோல் இன்றைய சூழ்நிலையில் மாநிலங்களுக்கு சுயாட்சியும், உரிய நிதிப் பகிர்வு மற்றும் நிதிச் சுதந்திரமும் வழங்குவதே இந்தியா என்ற கூட்டுக் குடும்பத்தை இன்னும் ஒற்றுமையானதாக நிலைத்திருக்கச் செய்யும் ஜனநாயக வழியாகும்.

    5. இறுதியாக. நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை எதற்காக உள்ளது என்ற சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக லோக்சபா இருப்பது போல், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்காக ராஜ்ய சபா இருக்கிறது. நிதி மசோதா தவிர்த்து மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் (உதாரணமாக CAA) மற்றும் அரசியல் சாசனச் சட்டத் திருத்தங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதலும் அவசியமாகிறது. ஒரு கூட்டாட்சி அரசியலில் மக்களவையில் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவமும், மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும் வழங்குவதே சரியான முறையாகும். அமெரிக்கா போன்ற முன்னுதாரணமான கூட்டாட்சி நாட்டில் அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் நாட்டில் மக்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்பது அடிப்படைக் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதே வேளையில் மற்ற நாடுகளுடன் முழுவதுமாக நம்மை ஒப்பிட முடியாது என்பதும் உண்மை. எனவே மாநிலங்களவையில் கூடுமானவரையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்துப் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்: அரசியல் சாசன வல்லுனர்களின் (constitutional experts) பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களவையில் உரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

    இவற்றையெல்லாம் விடுத்து 'equal population representation from each MP என்ற போர்வையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறு சீரமைப்பை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்: மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தமிழகத்தின் நலனைக் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் இந்தத் தலையாய பிரச்சனையில் தமிழ்நாட்டின் நலனுக்காக யார் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும்.

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று கூட்டாட்சித் தத்துவ முறை", ஆதலால் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்.," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஊழல் முறைகேட்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்கள் எழுந்தன.
    • போபர்ஸ் விவகாரத்தின் தாக்கத்தின் காரணமாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.

    புதுடெல்லி:

    கடந்த 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்கு சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன.

    இதற்காக போபர்ஸ் நிறுவனத்துடன் ரூ.1436 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையழுத்திடப்பட்டது. போபர்ஸ் ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.64 கோடி அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த ஊழல் முறைகேட்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்கள் எழுந்தன.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. போபர்ஸ் விவகாரத்தின் தாக்கத்தின் காரணமாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் 1999-ம் ஆண்டு போபர்ஸ் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே ராஜீவ்காந்தி 1999-ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் 1999-ம் ஆண்டு முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை செய லாளர் பத்நகர், போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, இடைத்தரகர் வின்சட்டா, குவாத்ரோச்சி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பின்னர் இந்த வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துஜா சகோதரர்கள் உள்பட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் டெல்லி ஐகோர்ட்டு 2005-ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. எனினும் இந்த விசாரணை மிகவும் மந்தமாக இருந்தது.

    இந்நிலையில் போபர்ஸ் வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களை கேட்டு மத்திய அரசு தரப்பில் அமெரிக்க நீதித்துறைக்கு சி.பி.ஐ. சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமான பேர்பாக்ஸின் தலைவர் மைக்கேல் ஹெர்ஸ்மேன், சுவிடன் ஆயுத உற்பத்தியாளர் ஏ.பி. போபர்ஸ் ஆகியோர் இந்தியாவில் இருந்து பீரங்கி வாங்குவதற்கான ஆர்டரை பெறுவதற்கு செலுத்தியதாக கூறப்படுவது உள்ளிட்ட வழக்கு விபரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மீண்டும் போபர்ஸ் வழக்கு விவகாரம் சூடுபிடிக்கும் நிலை உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

    • தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.

    பட்டியலின மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் தொகுதிகளில் எல்லை வரையறை செய்யப்படுகிறது.

    வரும் காலங்களில் முறையாக தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட வேண்டும்.

    ஆதாயம் கருதி அரசியல் செய்வதால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் 'மறுமலர்ச்சி' படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு மாணவர்கள் பா.ம.க. துண்டுடன் நடனமாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மறைந்த காடுவெட்டி குரு, வீரப்பன் படம் பொறித்த டி சர்ட் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    பா.ம.க. துண்டுடன் சாதி பாடலுக்கு நடனமாட செய்ததால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தையடுத்து பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ×