சிவாஜி வீடு வழக்கு- மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி

வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
சிவாஜி வீடு வழக்கு- மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி
Published on

சென்னை:

'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com