என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கான்வாய்"

    • இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
    • காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.
    • தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

    டெல்லி தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மன அமைதியை தேடி வருகிறார்.

    அந்த வகையில் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்த்கர் கிராமத்தில் உள்ள தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.

    இந்நிலையில் நேற்று இவ்விடத்துக்கு செல்ல கான்வாய் வாகனங்கள் சூழ அரவிந்த் கெஜ்ரிவால் காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

    இதற்கிடையே, கடந்த வருடம் கெஜ்ரிவால் உதவியாளரால் அவமதிக்கப்பட்டதாகப் பரபரப்பைக் கிளப்பிய ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் கெஜ்ரிவாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "முழு உலகையும் விஐபி கலாச்சாரத்திற்காக விமர்சித்த கெஜ்ரிவால், இன்று டொனால்டு டிரம்பை விட பெரிய பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்" என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

    ×