என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவில்களில் சினிமா பாட்டுக்கு தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
    X

    கோவில்களில் சினிமா பாட்டுக்கு தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    • பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோவில் விழாக்களில் சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், புதுவை திருமலையராயன்பட்டினத்தில் உள்ள பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

    விசாரணையின் முடிவில், கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    Next Story
    ×