என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் இருந்து இந்தோனேஷியாவை சேர்ந்த 2 பேர் உட்பட 9 பேர் கடத்தலுக்கு உதவிய 2 பேர் என 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
- குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!- தி.மு.க. சார்பில் வருகிற 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
- கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையுடன் சர்ச்சைக்குரிய வாசகம் அடங்கிய பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வழக்கில் கனல் கண்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்ட்டது.
இதனையடுத்து, "மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்வதால்தான், இதுபோன்ற நபர்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது" என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம்.
- காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-24 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி நண்பகல் 12.32 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.01 மணி வரை
பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு. மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருவெண்காடு, திருவொற்றியூர், திருத்தணி கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-கடமை
மிதுனம்-கண்ணியம்
கடகம்-நலம்
சிம்மம்-ஓய்வு
கன்னி-புகழ்
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-திடம்
தனுசு- ஈகை
மகரம்-நன்மை
கும்பம்-உதவி
மீனம்-வெற்றி
- மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
- அரசுப்பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
இதனிடையே சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பும் மகேஷ் தெரிவித்திருந்தார்.
சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளியின் மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
- இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள்.
- வருண் பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள்.
துபாய்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் நாளை நியூசிலாந்து அணி மோத உள்ள நிலையில் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியிலும் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே அவரது பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள். அவர் போன்ற மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலருக்கு எதிராக பகலில் பேட் செய்வது சற்று எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மொத்தத்தில் இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள். அனைவரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். இது எப்போதும் சவாலான விஷயம். அவர்களை சமாளிக்க தெளிவான திட்டமிடலுடன் தயாராக வேண்டும். எங்களது பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் பெரிய போட்டிகளில் எழுச்சி பெறக்கூடியவர். பல முறை நியூசிலாந்து அணிக்காக இதை செய்திருக்கிறார். அது மட்டுமின்றி உலகில் உள்ள வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு ரன் எடுப்பதில் தனித்துவமான ஆட்டக்காரர்களில் ஒருவர். இது அவருக்குரிய நாளாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்திய அணி துபாயில் மட்டும் ஆடுவது அவர்களுக்கு சாதகமான அம்சமா? என கேட்கிறீர்கள். போட்டி அட்டவணையை உருவாக்குவது எங்களது கையில் இல்லை. இது ஐ.சி.சி.யின் முடிவு. அதனால் அது பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இந்திய அணி தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. நாங்களும் இங்கு ஒரு ஆட்டத்தில் ஆடியுள்ளோம். அதில் கிடைத்த அனுபவத்தில் இருந்து சீக்கிரமாக கற்றுக்கொள்கிறோம்.
இந்த தொடரின் தற்போதைய நிலையை பார்த்தால், 8 அணிகளில் இருந்து 2 அணியாக இறுதி சுற்றுக்கு வந்துள்ளோம். எங்களது இடத்தில் இருந்து பார்த்தால், இது பரவசமூட்டும் ஒரு சூழல். இன்னும் ஒரு ஆட்டம் தான் எஞ்சியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாறி மாறி அலைந்தது கொஞ்சம் சோர்வாகத் தான் இருந்தது. லாகூரில் இருந்து துபாய்க்கு வருவதற்கே ஒரு நாள் சரியாகி விட்டது. ஆனாலும் பயணக்களைப்பில் இருந்து மீண்டு இறுதிப்போட்டிக்கு திட்டமிடுவதற்கும், பயிற்சி செய்வதற்கும் இரு நாட்கள் உள்ளது. நிறைய பயிற்சி செய்வதை விட உடலுக்கும், மனதுக்கும் சரியான இணைப்பு இருக்க வேண்டியது முக்கியம். அடுத்த இரு நாட்களில் இதில் தான் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.
- சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- நாடு முழுதுமுள்ள பெண்களுக்கு ஜனாதிபதி சர்வதேச மகளிர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
புதுடெல்லி:
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது.
நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர்.
எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம்.
சாதனை படைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 6-7 (4-7) என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் இருந்து ஸ்வரேவ் வெளியேறினார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
- பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (இலங்கை டெஸ்ட் தொடரில் 141, 131, ரன் எடுத்தார். நியூசிலாந்தின் பிலிப்ஸ் கடைசி 5 போட்டிகளில் 236 ரன்கள் குவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு தாய்லாந்தின் திபாச்சா, ஆஸ்திரேலியாவின் அலானா கிங் மற்றும் அனாபெல் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
- பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக மொரீசியஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார்.
- மொரீசியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11-ம் தேதி மொரீசியஸ் நாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது மொரீசியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும், இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் மொரீசியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் பிரிட்டிஷ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பிரிட்டிஷ் வீராங்கனையான எம்மா ராடுகானு, ஜப்பானின் மோயூகா உசிஜிமா உடன் மோதினார்.
இதில் எம்மா ராடுகானு 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- மத்திய மந்திரி ஜெய்சங்கர் அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்துப் பேசினார்.
- அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார்.
டப்ளின்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.
இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று திறந்து வைத்தார்.






