பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி மொரீசியஸ் பயணம்

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக மொரீசியஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார்.மொரீசியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி மொரீசியஸ் பயணம்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11-ம் தேதி மொரீசியஸ் நாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது மொரீசியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும், இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் மொரீசியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com