என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்துப் பேசினார்.
    • அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார்.

    டப்ளின்:

    இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.

    இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று திறந்து வைத்தார்.

    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டானிஷின் கெம்கே உடன் மோதினார்.

    இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-23, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆயுஷ் ஷெட்டி தைவான் வீரர் லின் சுன் யீயை சந்திக்க உள்ளார்.

    • இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கின.
    • மேற்குவங்காளம் மற்றும் அம்பாலாவில் இந்த விபத்துகள் நடைபெற்றன.

    புதுடெல்லி:

    அரியானாவின் அம்பாலா பகுதியில் ஜாகுவார் ரக விமானம் இன்று காலை தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது. பயிற்சியின்போது நடந்த இந்தச் சம்பவத்தில் மக்கள் யாரும் வசிக்காத பாதுகாப்பான பகுதிக்குச் சென்ற விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பாக்தோக்ரா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏ.என்.32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று இன்று விபத்தில் சிக்கியது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வகை விமானத்தில் இருந்த விமானி விபத்தில் இருந்து உயிர் தப்பினார். அவர் பாதுகாப்பாக உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    ஒரே நாளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் விபத்தில் சிக்குவது இது 2-வது முறையாகும்.

    • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து பேட் செய்த குஜராத் அணி 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    லக்னோ:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 57 பந்தில் 92 ரன்கள் குவித்தார். ஷபாலி வர்மா 40 ரன்னில் அவுட்டானார்.

    குஜராத் அணி சார்பில் மேக்னா சிங் 3 விக்கெட்டும், டாட்டின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. பெத் மூனி 44 ரன்னிலும், ஆஷிஷ் கார்ட்னர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஹர்லீன் தியோல் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், குஜராத் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 4வது வெற்றி ஆகும்.

    • அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • பிரக்ஞானந்தா 3வது இடம் பிடித்துள்ளார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இதன் 9வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் சீனாவின் வெய் யீ உடன் மோதி வெற்றி பெற்றார்.

    இதையடுத்து, அரவிந்த் சிதம்பரம் 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

    • விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது.
    • பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

    சீன இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதிக்கும் சீனா வரி விதித்துள்ளது.

    இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, டிராகன் (சீனா) மற்றும் யானையை (இந்தியா) சேர்ந்து நடனமாட வைப்பது மட்டுமே சரியான தேர்வு. புது டெல்லியும் பெய்ஜிங்கும் விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது. பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும்.

    ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் கைகோர்த்தால், சர்வதேச உறவுகளின் ஜனநாயகமயமாக்கல், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கான பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக ஒருவருக்கொருவர் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார்
    • திரைப்படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் நானியின் வால் போஸ்டர் சினிமா மற்றும் பிரஷாந்தி திபிர்னேனி இணைந்து தயாரித்துள்ளனர்.

    இப்படத்தில் ஹர்ஷ் ரோஷன் மற்றூம் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் சிவாஜி, சாய் குமார், ரோகினி மற்றும் ஹர்ஷவர்தன் நடித்துள்ளனர். ஹர்ஷ் ரோஷன் இதற்கு முன் நானியின் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை மையப்படி கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. செய்யாத குற்றத்தின் கீழ் காதலனை போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கை பிரியதர்ஷி எடுத்து வாதாடுகிறார். இதை மையமாக வைத்து திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது.
    • கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருந்தார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

    பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

    மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணி முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி கண்டனம் தெரிவித்தள்ளார்.

    இது தொடர்பாக கில்லஸ்பி கூறுகையில் "நான் கவாஸ்கரின் வார்த்தை ஜாலங்களை ஏற்கவில்லை. சுனில் கவாஸ்கர் இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் எனக் கூறியதை நான் பார்த்தேன். இது முட்டாள் தனமானது. முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.

    • இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர்.
    • ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள்.

    சிரியாவில் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி  அதிபர் பஷர்  அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். தப்பியோடிய ஆசாத் ரஷியாவில் தஞ்சமடைந்தார்.  இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபர் ஆசாத் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.

    சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வன்முறை வெடித்துள்ளது. அங்கு மலைப்பாங்கான கடலோர கிராம பகுதியில் துப்பாக்கிகளுடன் கூடியிருந்த அசாத் விசுவாசிகளை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் முயன்றனர்.

    அப்போது நடந்த மோதல்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) இதை உறுதிப்படுத்தி உள்ளது.

    இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர். படுகாயமடிந்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விசுவாசிகள், ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.   

    • அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம் II-ல் 15 மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் எளிதாக அணுகக்கூடியவகையில் வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.

    இந்தியாவின் சீரான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிலைய வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த ஒப்பந்தம் M/s v-shesh Learning Services Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 18, 2025 அன்று வழங்கப்பட்ட ஏற்பு கடிதத்திலிருந்து 180 நாட்களுக்குள் முடிக்கப்பட உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகாபிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s v-shesh Learning Services Private நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் P.ராஜசேகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எளிதாக அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் சீரான வழிகாட்டுதல்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கட்டம் II-ல் 15 மெட்ரோ ரெயில் நிலையங்களில் வடிவமைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக M/s v-shesh Learning Services Private ஆலோசனை நிறுவனம், கட்டம்-I-ல் செயல்பாட்டில் உள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் 10 ஓவருக்குப் பிறகு பவர்பிளே கோட்டிற்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்க வேண்டும் என்பது கொடூரமான விதி.
    • பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும்போது, ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் மூலம் பவுண்டரி அடித்து விடுகிறார்கள்.

    டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் வடிவில் விளையாடுவதற்குன ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-

    உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகிவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. இது விளையாடுவதற்கான மோசமான வடிவம். இதற்கு ஏராளமான காரணம் இருப்பதாக நினைக்கிறேன்.

    ஒருநாள் போட்டி வடிவத்திற்கான விதி பயங்கரமானதாக உள்ளது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். விக்கெட் எடுப்பதற்கும், எந்தவிதமான நெருக்கடிகை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்.

    தற்போது 11 முதல் 40 ஓவரை வரை நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர்பிளே கோட்டிற்கு வெளியே இருப்பதால், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும்போது அவருக்கு சற்று நெருக்கடி கொடுக்கும்போது, அவர் ஜஸ்ட் ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் செய்கிறார். இதனால் ஒரு ரன் மட்டுமல்ல நான்கு ரன்கள் கிடைக்கிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிறந்த ஆப்சனாக உள்ளது.

    இவ்வாறு மொயீன் அலி தெரிவித்தார்.

    தற்போது இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கேஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிவானந்தம், மகேஷ், முரளி, பாண்டுரங்கன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

    காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 28 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    ×