என் மலர்
நீங்கள் தேடியது "வர்த்தகப் போர்"
- அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார் டிரம்ப்.
- அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 3-ம் தேதி அமலுக்கு வருகிறது.
டொரண்டோ:
அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், "இது வளர்ச்சியைத் தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரி விதிக்கிறோம்" என தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 3-ம் தேதி அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். நிச்சயமாக அடுத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதிபர் டிரம்ப் கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
- வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.
அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய டிரம்ப், "இது வளர்ச்சியை தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரிவிதிக்கிறோம்," என்று தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கும் புதிய வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.
அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே வாகனங்கள் இறக்குமதி விவகாரத்தில் வரி விதிப்பது பற்றி பேசி வந்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும், இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது 25 சதவீதம் வரி விதித்து இருப்பதன் மூலம் அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு சுமார் 8 மில்லியன் கார்கள் மற்றும் இலகு ரக டிரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு மட்டும் 244 பில்லியன் டாலர்கள் ஆகும். மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு அதிக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வாகனங்களை தொடர்ந்து அவற்றுக்கான உதிரிபாகங்கள் பெரும்பாலும் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 197 பில்லியன் டாலர்கள் ஆகும்.
வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
வாகனங்கள் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
வரி விதிப்பு அமலுக்கு வரும் போது அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை 12500 டாலர்கள் வரை அதிகரிக்கும். இதன் மூலம் மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கக்கூடிய சூழல் குறையும்.
வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என டிரம்ப் நம்பிக்கை.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் நீண்ட கால பயன்கள் அதிகரிக்கும் என்ற நிலையில், குறுகிய காலக்கட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவீனங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்கள் பெரும்பாலான பாகங்களை பெறுவதற்கு மெக்சிகோ, கனடா மற்றும் ஆசிய சந்தைகளை சார்ந்து இருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். இதனால், வாகனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.
அதிபர் டிரம்ப் உத்தரவு காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெலான்டிஸ் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் பங்குகள் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் லாபத்தில் நீண்ட கால விளைவுகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.
கனடா, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரிவிதிப்பு நடவடிக்கை வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கிவிடும். ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அமெரிக்க மதுபானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த அறிவிப்புக்கு அதிபர் டிரம்ப் ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று பதிலடி கொடுத்தார்.
அதிக கார் செலவுகளை ஈடுகட்ட டிரம்ப் ஒரு புதிய வரி ஊக்கத்தொகையை முன்மொழிந்துள்ளார். அதன்படி கார் வாங்குபவர்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தேர்வு செய்யும் போது அரசு வருமான வரிகளில் இருந்து வாகன கடன்களுக்கான வட்டியைக் கழிக்க அனுமதிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
இந்த வரிகள் பணவீக்கத்தைத் தூண்டி, நுகர்வோருக்கு தேர்வுகளை குறைக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இவை டிரம்பின் பரந்த பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாகும். இதில் எஃகு, அலுமினியம், கணினி சில்லுகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் மீதான வரிகளும் அடங்கும்.
- டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும்.
வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வெனிசுலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வாங்கியுள்ளது அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்கா 8.6 பாரெல் எண்ணெயை வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
- பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள கனடாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்தார். பாராளுமன்றத்தை கலைக்க அவர் பரிந்துரை செய்தார்.
கனடா பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி வரை இருக்கிறது. ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.
இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி பேசும் போது, "கனடாவில் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.
டிரம்ப் நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
- வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
- இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரேசில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக வரி விதிப்பதை அடுத்து, அந்த நாடுகளுக்கு அதிக வரி வசூலிக்கும் திட்டம் ஏப்ரல் 2-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரி விதிப்பில் சூமூக உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிக வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து வரி விதிப்பை அதிகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு வார காலம் அமெரிக்க பயணம் மேற்கொண்டு வர்த்தக விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து, அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.
"மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய அதிகாரிகள் மிக முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர். 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இருதரப்புக்கும் அதிக பாதிப்புகள் இன்றி ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன," என்று இந்த விவகாரம் குறித்த விவரங்கள் அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்.
அதிக வரி விதிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், டிரம்ப்-இன் வரி தீட்டும் நடவடிக்கையில் இருந்து இந்தியா தப்பிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது.
- பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதிக்கும் சீனா வரி விதித்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, டிராகன் (சீனா) மற்றும் யானையை (இந்தியா) சேர்ந்து நடனமாட வைப்பது மட்டுமே சரியான தேர்வு. புது டெல்லியும் பெய்ஜிங்கும் விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது. பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும்.
ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் கைகோர்த்தால், சர்வதேச உறவுகளின் ஜனநாயகமயமாக்கல், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கான பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக ஒருவருக்கொருவர் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், ’தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.
இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.
சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்றார். #TradeWar
ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் அதிரடி வரிஉயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது பாதுகாப்பு அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து இருப்பது சீனாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கையாகும்.
எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது, இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. இதனால், அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கும் பொருளாதார தடை எச்சரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWar







