என் மலர்

  செய்திகள்

  தவறை சரிசெய்து கொள்ளுங்கள், இல்லையேல் கடும் விளைவுகளை  சந்திக்க நேரிடும் - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
  X

  தவறை சரிசெய்து கொள்ளுங்கள், இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள், என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #TradeWar
  பெய்ஜிங் :

  ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது.

  அமெரிக்காவின் அதிரடி வரிஉயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது பாதுகாப்பு அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து இருப்பது சீனாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இதற்கிடையே, இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கையாகும்.

  எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

  இந்நிலையில், ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது, இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. இதனால், அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கும் பொருளாதார தடை எச்சரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWar
  Next Story
  ×