என் மலர்
செய்திகள்
- சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வந்திருந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29,30,31-ந்தேதிகளில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
இடமாற்றம் இனிமை தரும் நாள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
ரிஷபம்
யோகமான நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.
கன்னி
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
விருச்சிகம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மகரம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடிவதில் தாமதமாகலாம்.
- மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெஹ்ரான்:
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10,600 பேர் கைது செய்யப்பட்டனர்.
- உலக இந்தி தினம் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது.
- சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
பீஜிங்:
உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது. சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திய துணைத்தூதர் பிரதிக் மாத்தூர், இந்தி மொழி எல்லைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது என கூறினார். அவர் பிரதமர் மோடியின் செய்தியையும் வாசித்தார்.
- ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் இன்று அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.
- ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
12-ம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 விண்ணில் ஏவப்படுகிறது. இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனைக் கருவியும் பொருத்தப்பட்டது.
இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.12 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள்.
- 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது என்றார்.
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று பிரசித்தி பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார்.
இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது:
சோமநாதரின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர்.
கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.
வெறும் பொருளுக்காக நடந்த தாக்குதல் என்றால் ஒருமுறை நடத்தியிருந்தால் போதும். ஆனால் சோமநாத் கோவில் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதல் கோவிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என நமக்கு கற்பிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றபோது அவருக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்க முயன்ற அந்த சக்திகள் இன்றும் நம்மிடம் உள்ளன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 160 ரன்கள் குவித்தது.
- கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார்.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார். குசால் மெண்டிஸ் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் வாசிம் ஜுனியர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் சல்மான் ஆகா 12 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 12 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 1-1- என சமனில் முடிந்தது.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஹசரங்கா வென்றார்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. சோபி டிவைன் 95 ரன்னும், அஷ்லே கார்ட்னர் 49 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் நந்தனி ஷர்மா 5 விக்கெட்டும், சினேலி ஹென்றி, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லீசெல் லீ 54 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். லாரா வோல்வார்ட் 38 பந்தில் 77 ரன்கள் குவித்து கடைசி வரை போராடி அவுட்டானார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
- இந்தியா 49 ஓவரில் 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
- ரோகித் சர்மா 2 சிக்சர் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார்.
வதோதரா:
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 2 சிக்சர் பறக்கவிட்டு 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா மொத்தம் 329 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் .
தொடக்க ஆட்டக்காரராக கிறிஸ் கெயில் 328 சிக்சர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 7-6(7-1) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.






