என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்சர்கள்"

    • இந்தியா 49 ஓவரில் 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
    • ரோகித் சர்மா 2 சிக்சர் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார்.

    வதோதரா:

    இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 2 சிக்சர் பறக்கவிட்டு 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா மொத்தம் 329 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் .

    தொடக்க ஆட்டக்காரராக கிறிஸ் கெயில் 328 சிக்சர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் முதல் இடத்தில் உள்ளார்.
    • வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    மும்பை:

    ஐ.சி.சி. சார்பில் கடந்த ஆண்டில் அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் 32 இன்னிங்ஸில் 65 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

    இந்திய வீரரான அபிஷேக் சர்மா 21 இன்னிங்சில் 54 சிக்சர்களை அடித்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் 50 இன்னிங்ஸில் 54 சிக்சர்களும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 45 இன்னிங்ஸில் 50 சிக்சர்களும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா பர்ஹான் 26 இன்னிங்ஸில் 45 சிக்சர்களும் அடித்து 3,4 மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.

    தற்போது ரிஷப் பண்ட் 88 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித்துடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார். 

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிக்சர் மழை அதிகளவில் பொழியப்பட்டுள்ளது.
    • நேற்றைய 64-வது போட்டிக்கு பிறகு 1125 சிக்சர்கள் இது அடிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.

    நேற்றைய 64-வது லீக் போட்டிக்குப் பிறகு நடப்பு தொடரில் இதுவரை 1,125 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போட்டியை தாண்டி சிக்சர்களில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இன்னும் 6 லீக் உள்பட 10 ஆட்டங்கள் இருப்பதால் சிக்சர்களின் எண்ணிக்கை அதிகமாக உயரும்.

    கடந்த ஐ.பி.ல். தொடரில் 1,124 சிக்சர்கள் எடுக்கப்பட்டது. 2022-ல் 1,062 சிக்சர்களும், 2018-ல் 872 சிக்சர்களும், 2019-ல் 784 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.

    நடப்பு சீசனில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 12 ஆட்டத்தில் 146 சிக்சர்களை விளாசியுள்ளது. அந்த அணி ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்களை அடித்து சாதனை படைத்து இருந்தது.

    அதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி 13 போட்டிகளில் 141 சிக்சர்களையும், டெல்லி கேப்பிடல்ஸ் 135 சிக்சர்களையும் அடித்துள்ளன.

    கொல்கத்தா (125 சிக்சர்கள்), மும்பை (122), பஞ்சாப் (102), ராஜஸ்தான் (100) சென்னை (99), லக்னோ (88), குஜராத் (67) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 35 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பெங்களூருவின் விராட் கோலி 33 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், கொல்கத்தாவின் சுனில் நரேன் 32 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், டிராவிஸ் ஹெட், கிளாசன் (இருவரும் ஐதராபாத்) தலா 31 சிக்சர்களுடன் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

    ×