என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
    • மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர்," விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று கூறினார்.

    மேலும் சீமான் கூறியதாவது:- நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்.

    மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.

    மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.

    அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.

    இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டனர்.

    இந்நிலையில், லோகா திரைப்படம் உலகளவில் 202 கோடி ரூபாய் வசூலித்துள்ளது . வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது.

    இந்நிலையில் IMDB-வலைத்தளத்தில் இந்த வார பிரபலமான இந்திய திரைப்பிரபலங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இரண்டாம் இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார்.

    • முன்னாள் தலைமை நீதிபதி இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பு இருந்தது.
    • தற்போது அவருக்குப் பதிலாக இன்ஜினீயரை போராட்டக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.

    அரசியல் தலைவர்களின் ஊழல்களை எதிர்த்து இளைஞர்கள் ஜென் இசட் போராட்டங்கள் (Gen Z protests) என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் நேபாளம் அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவித்தது.

    இதனால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீவைத்தனர். வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர்.

    போராட்டம் எதிரொலியால் ஜனாதிபதி, பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இடைக்கால அரசு அமைத்து உடனடியான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவம் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

    நேற்று முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    ஜென் இசட் பேராட்டம் குழுக்கள் ஆலோசனை நடத்தி காத்மாண்டு மேயர் பலேந்த்ரா பலேன் ஷா மற்றும் சுஷிலா கார்கி ஆகியோர் பெயர்களை பரிசீலனை செய்துள்ளது.

    முதல் தேர்வு காத்மாண்டு மேயர் பலேந்த்ராவாகத்தான் இருந்துள்ளார். ஆனால், இவர் இடைக்கால அரசின் தலைவராக இருக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, தற்காலிய கட்டுப்பாட்டில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், கீசிங் என்பவரை இடைக்கால பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. குல் மான் கீசிங் நேபாளத்தின் மின்சார நெருக்கடியை சமாளித்த திறமையான என்ஜினீயர் ஆவார். இவர் தேசப்பற்று கொண்டவர். எல்லோருக்கும் பிடித்தமானவர் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

    முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் நீதிபதிகள் பிரதமராக வருவதை அரசியலமைப்பு தடை செய்கிறது என்றும், 73 வயதில் அவர் 'மிகவும் வயதானவர்' என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால இடைக்கால தலைவரை நியமிப்பதில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நேபாள அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியை சேர்ந்தவர், அவருக்கு மெஜாரிட்டி இருக்கும் பட்சத்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இல்லை என்றால், ஜனாதிபதி நியமனம் செய்வார். அல்லது எதாவது எம்.பி. முன் முயற்சி மேற்கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பபை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
    • உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

    சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.

    தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓணம் பண்டிகையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
    • இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

    பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், "மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளா வந்திருந்த போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்கினை பெற வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதைபாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.

    ஓணம் பண்டிகை நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

    பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்" என்று தெரிவித்தார்.

    பல ஒரிஜினல் வெப் தொடர்களை சோனி லிவ் உருவாக்கியுள்ளனர்.

    பிரபல ஓடிடி தளங்களில் சோனி லிவ் முக்கியமானதாகும். பல ஒரிஜினல் வெப் தொடர்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். முக்கிய மலையாள திரைப்படங்களையும் சோனி லிவ் கைப்பற்றியுள்ளது.

    சோனி லிவ் வெப் தொடர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தி ஹண்ட், மாயசபா போன்ற வெப் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஷோக்கள் என அனைத்தையும் தெரிவிக்கும் வகையில் சோனி லிவ் ஓடிடி தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ரசிகர்களுக்கு பிடித்த ஷோக்களின் அடுத்த சீசன்களின் அறிவிப்பு:

    ஸ்காம் 1992 மற்றும் ஸ்காம் 2023 வெற்றி தொடர்களை தொடர்ந்து ஹன்சல் மேத்தா ஸ்காம் 2010 என அடுத்த சீசனை இயக்கியுள்ளார்.

    மகாராணி சீசன் 4, ஃப்ரீடம் அட் மிட்நைட் சீசன் 2, குல்லாக் சீசன் 5 மற்றும் அந்தேகி சீசன் 4 வெளியாக இருக்கிறது.

    தமிழில்

    Sethurajan IPS

    தமிழ் திரையுலகில் நடனக்கலைஞர், நடிகர் பிரபுதேவா, OTT-வில் முதல் முறையாக IPS அதிகாரி வேடத்தில் அறிமுகமாகிறார். இயக்குனர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கும் இந்த அரசியல் பின்புலக் கொலை மர்மத் திரில்லர், சமூக மற்றும் அரசியல் சதிகள் கலந்த கதை மாந்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Free Love

    மிர்னாலினி ரவி நடிப்பில், இயக்குனர் அப்பாஸ் அஹ்மது இயக்கும் Free Love, சாதாரண காதலைத் தாண்டி சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடுக்கும் தனிச்சிறப்பான காதல் கதையை மையமாகக் உருவாகியுள்ளது.

    Theevinai Pottru

    சத்யராஜ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது முதல் தமிழ் OTT படமாகவும் வரும் Theevinai Pottru, ஊர் சூழலில் நடைபெறும் கொலை மர்மம் அடிப்படையிலான திரில்லராக உருவாகியுள்ளது

    The Madras Mystery – Fall of a Superstar

    நஸ்ரியா பாஹத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த வரலாற்று குற்றப் படைப்பு, சினிமா சூப்பர்ஸ்டார் ஒருவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது. ஹிஸ்டாரிக்கல் கிரைம் டிராமா பாணியில் வெளியாகும் இந்த வலைத் தொடர் அதிக கவனம் பெற்றுள்ளது.

    Kuttram Purindhavan – The Guilty One

    இயக்குனர் செல்வமணி இயக்கத்தில், பசுபதி நடிக்கும் Kuttram Purindhavan, குற்றம், தண்டனை மற்றும் உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்வியைச் சுற்றி நகரும் திகில் திரில்லர். லக்ஷ்மிப்ரியா, சந்திரமௌளி மற்றும் விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    Telugu OTT

    Brinda Season 2

    வெற்றி பெற்ற திரில்லர் Brinda வின் இரண்டாம் பாகத்தில், த்ரிஷா மீண்டும் வருகிறார். இயக்கம்: சூர்யா மனோஜ் வாங்களா.

    Black and White – Rise of the Shadow

    ஜகபதி பாபு முன்னணி கதாபாத்திரத்தில், திகில் கலந்த த்ரில்லர்-டிராமா.

    இந்த வரப்போகும் வெளியிட்டால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

    இருநாடுகளுக்கும் சாதகமான சூழலில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

    • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை அதிகாரிகள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
    • இதை எதிர்த்து பெண் ஒருவர் நேரலையில் பேசியபோது, கணவன் இடைமறித்தபோது சண்டை ஏற்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மெகராஜ் மாலிக். இவர் தோடா பகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இவர் ஆவார்.

    இவரை அதிகாரிகள் பொது ஒழுங்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய செயலில் ஈடுபட்டதாக கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இதனால் தோடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போன்ற தடையை தோடாவில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வின் கைதுக்கு எதிராக பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவரது கணவர், அதை கண்டு உடனடியாக லைவ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இருந்தபோதிலும், அவர் நிறுத்தவில்லை. இதனால் கணவர் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இருந்தபோதிலும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன் என அந்த பெண் தொடர்ந்து பேசியுள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை லைவ் நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலான நிலையில், கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை தடை உத்தரவை மீறியதற்காகவும், லைவ் நிகழ்ச்சியின்போது மனைவி தாக்கியதற்காக கணவனையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியக் குடியாக துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள்.
    • C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.

    இந்திய குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாடாளுமன்றக் குழு, பொது நிறுவனங்கள் குழு நிதிக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உடையவரும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக பணியாற்றிய பெருமைக்குரியவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர், மகாராஷ்டிர பாநில ஆளுநர் போன்ற பதவிகளை சிறப்புற வசித்தவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியக் குடியாக துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள்.

    நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.

    திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட காமராஜர் வளைவுப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    காமராஜர் வளைவுப் பகுதிக்கும் பதில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன்.

    தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.

    இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.

    இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை வைஷு ஒருவர் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    அந்த புகாரில்," கடந்த 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். அதில் கடந்த 5 வருடங்களாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம், தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

    திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கூட நாங்கள் இருவரும் ரிசார்ட் சென்று இருந்தோம். அதன் பிறகு, நாம் பழக வேண்டாம், அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறது என்றார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் இதற்கு பதில் விளக்கமளித்து நாஞ்சில் விஜயனும் அவரது மனைவி மரியாவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதில் " ஏன் வைஷு இப்படி பன்ணீங்க. என் கணவர இப்படி கொச்சை படுத்திட்டீங்க, வெளியில தலை காட்ட முடியல. எங்க ரெண்டு பேர் நடுல பிரச்சனை கொண்டு வரதுக்காக இப்படி பண்றீங்களா?, எனக்கும் வைஷுவிற்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது, நான் அவரை ஒரு சகோதிரி, தோழியை போல் தான் பார்த்தேன். என் மீது அவர் அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்" என கூறியுள்ளார்.

    • விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
    • நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    இந்நிலையில், நிலா மற்றும் சீனாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த விவரங்கள் சீனாவுக்கு தெரிந்துகூட கூடாது என்பதற்காக நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    ×