என் மலர்tooltip icon

    உலகம்

    முன்னாள் தலைமை நீதிபதி இல்லை, தற்போது இன்ஜினீயர்: நேபாளத்தின் இடைக்கால பிரதமர் யார்?- நீடிக்கும் குழப்பம்
    X

    முன்னாள் தலைமை நீதிபதி இல்லை, தற்போது இன்ஜினீயர்: நேபாளத்தின் இடைக்கால பிரதமர் யார்?- நீடிக்கும் குழப்பம்

    • முன்னாள் தலைமை நீதிபதி இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பு இருந்தது.
    • தற்போது அவருக்குப் பதிலாக இன்ஜினீயரை போராட்டக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.

    அரசியல் தலைவர்களின் ஊழல்களை எதிர்த்து இளைஞர்கள் ஜென் இசட் போராட்டங்கள் (Gen Z protests) என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் நேபாளம் அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவித்தது.

    இதனால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீவைத்தனர். வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர்.

    போராட்டம் எதிரொலியால் ஜனாதிபதி, பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இடைக்கால அரசு அமைத்து உடனடியான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவம் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

    நேற்று முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    ஜென் இசட் பேராட்டம் குழுக்கள் ஆலோசனை நடத்தி காத்மாண்டு மேயர் பலேந்த்ரா பலேன் ஷா மற்றும் சுஷிலா கார்கி ஆகியோர் பெயர்களை பரிசீலனை செய்துள்ளது.

    முதல் தேர்வு காத்மாண்டு மேயர் பலேந்த்ராவாகத்தான் இருந்துள்ளார். ஆனால், இவர் இடைக்கால அரசின் தலைவராக இருக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, தற்காலிய கட்டுப்பாட்டில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், கீசிங் என்பவரை இடைக்கால பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. குல் மான் கீசிங் நேபாளத்தின் மின்சார நெருக்கடியை சமாளித்த திறமையான என்ஜினீயர் ஆவார். இவர் தேசப்பற்று கொண்டவர். எல்லோருக்கும் பிடித்தமானவர் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

    முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் நீதிபதிகள் பிரதமராக வருவதை அரசியலமைப்பு தடை செய்கிறது என்றும், 73 வயதில் அவர் 'மிகவும் வயதானவர்' என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால இடைக்கால தலைவரை நியமிப்பதில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நேபாள அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியை சேர்ந்தவர், அவருக்கு மெஜாரிட்டி இருக்கும் பட்சத்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இல்லை என்றால், ஜனாதிபதி நியமனம் செய்வார். அல்லது எதாவது எம்.பி. முன் முயற்சி மேற்கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பபை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.

    Next Story
    ×