தியாகி இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை- விஜய்

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை- விஜய்
Published on

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com