என் மலர்
நீங்கள் தேடியது "இமானுவேல் சேகரன் நினைவு தினம்"
- அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
- அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
- மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நாளில் முதலமைச்சரின் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் இங்கு மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
அவருக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம். அதில் தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் அதனுடைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறந்து வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க., பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்களே அதுபற்றி கூறுங்கள் என்ற நிருபர்கள் கேட்டதற்கு, இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
- ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் தர்மர் எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், த.வெ.க. சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், மதுரை மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.தங்க பாண்டியன், கல்லணை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலர்விழி பாலா, மதன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், 24 எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 ஆயிரத்து 400 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை தவிர 45 பறக்கும் படை வாகனங்கள், நவீன கேமராவுடன் 2 டிரோன்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்தவர் ஐயா இமானுவேல் சேகரன்.
- ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ தள பதிவில் கூறியிருப்பதாவது:
சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்கள், அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
- திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
விழுப்புரம்:
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன.
* பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
* மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது.
* மதுவிலக்கு என்ற குரலுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.
* மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.
* திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
* அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?
* மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான்.
* மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.
* திமுகவுக்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை தான் முன்வைக்கிறோம் என்று கூறினார்.
- தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
- நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், அமைச்சியாபுரம் காலனியில் நேற்று இரவு திடீரென்று இமானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை போலீஸ் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.
- மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எந்தவித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






