search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Immanuvel Sekaran"

    • அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
    • போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி அளவில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    காலை 9 மணிக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு சமுதாய நல அமைப்பினர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட் டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் தலைமையில் தென் மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை ஆகியோர் மேற்பார்வையில் 25 எஸ்.பி.க்கள் ,10 கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் என 8 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மது கடைகள் மூடப்பட்டிருந்தன.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ரூ.3 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் என்னை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

    தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும்.

    இவர் 1942-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து பரமக்குடியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். #ImmanuvelSekaran
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது.

    காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலா ளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இதே போல் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சுப.த. திவாகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. #ImmanuvelSekaran

    ×