என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை வன்னியர்கள் இழந்திருக்கின்றனர்.
- 15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் 21 பாட்டாளிகளும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர். அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.
தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசு தவறியதால் கடந்த 4 ஆண்டுகளில் 3600 எம்.பி.பி.எஸ் இடங்களையும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் வன்னிய மாணவர்கள் இழந்திருக்கின்றனர்.
அதேபோல், நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000-க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000-க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000-க்கும் கூடுதலான இடங்களும் பறிபோயிருக்கின்றன.
மேலும் அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளையும் வன்னியர்கள் இழந்திருக்கின்றனர். வன்னியர்களுக்கு எதிரான இவ்வளவு பெரிய சமூகநீதி துரோகத்தை செய்தது திராவிட மாடல் அரசு தான். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான்.
15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும், தியாகங்களையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் 21 ஈகியர்களின் நினைவு நாளில், நமக்கான சமூகநீதிப் போராட்டப் பயணத்தை அவர்களின் வாழ்த்துகளுடன் தொடருவோம்.
அத்துடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
- இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் பில் சால்ட் 2வது இடத்திற்கு முன்னேறினார்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில உள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. ஒரு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களை பார்த்தால் அவர்களது காதலின் முடிவு என்ன மாதிரி இருக்கும் என கவினுக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளனர்.
இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து களமாடி வருகிறார்கள்.
இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கிவிட்டார்.
அதன்படி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருச்சி மரக்கடை பகுதிக்கு செல்லும் வழியெங்கும் தொண்டர்கள் நெரிசல் சூழ்ந்துள்ள நிலையில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பிரசார வாகனம் செல்ல முடியாத வகையில் கூட்ட நெரிசல் சூழ்ந்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். வழியெங்கும் சூழ்ந்துள்ள தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி த.வெ.க. தலைவர் விஜய் உற்சாகத்துடன் வந்தார்.
திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதற்கு 10.30 முதல் 11 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்தது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிரது.
- இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வெளியான F16 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கேலக்ஸி ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள், 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F17 5ஜி அம்சங்கள்:
6.7 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
எக்சைனோஸ் 1330 பிராசஸர்
மாலி-G68 MP2 GPU
4 ஜிபி / 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7.0
50MP பிரைமரி கேமரா, F1.8, AF OIS
5MP F2.2 அல்ட்ரா-வைடு லென்ஸ்
2MP F2.2 மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ்
13MP F2.0 செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர்
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP54)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.3, GPS + GLONASS
5000mAh பேட்டரி
25W வேகமான சார்ஜிங்
விலை விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மெமரி மாடலின் விலை ரூ.14,499 ஆகும். 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
- இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர்.
- இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.
ஜூலை 11, 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த ஜூலை மாதம் அந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் 2015 தீர்ப்பில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் 2006 முதல் போலீஸ் காவலில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும், சமூகத்தில் தன் பெயர் மீதாக தவறாக கற்பிக்கப்பட்ட களங்கத்துக்கும் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்தில் அவர் மனு செய்துள்ளார். மேலும் தனது மறுவாழ்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2006 இல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். கடந்த 2015 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த 9 வருட சிறைவாசம், தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையை பாதித்ததாகவும், போலீஸ் கஸ்டடியில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளால் தனக்கு கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
- கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
- கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
மதுரையில் கடந்த மாதம் 21-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு திடலில் த.வெ.கவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. அப்போது கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்ற போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
ஆனால் கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதையடுத்து காரின் உரிமையாளருக்கு புதிதாக கார் ஒன்று வழங்கப்படும் என த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இச்சம்பவம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில், கட்சி மேலிடத்தில் பேசி, என் காரை என் விருப்பப்படி தயார் செய்திருக்கிறார்கள். விஜய் கையால் வண்டியை வாங்க வேண்டும் என்று குடும்பத்தோடு காத்திருக்கிறேன். இழந்த காரை விட நல்லகார்தான் எனக்கு கிடைக்கிறது. நான் வேதனையடைந்திருப்பதாக செய்திகள் பரப்புகின்றனர். அது உண்மையில்லை என தினேஷ் கூறியுள்ளார்.
- இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
- நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சமூக வலைதள தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த செப்டம்பர் 9 ஆம் நீதி நேபாள் பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் " நேபாளத்தில் திருமதி சுசிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நெருங்கிய அண்டை நாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கூட்டாளியாக, இந்தியா நமது இரு மக்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்" என்று தெரிவித்திருந்தது.
- டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.
த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.
இந்நிலையில் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜயை காண விமான நிலையத்தில் அதிகாலை முதல் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் வந்த காரணத்தினால் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் தடுப்பு வேலி மற்றும் கயிறு கட்டி அவர்களை கட்டுப்படுத்தினர்
தடுப்புகளை தாண்டி விமான நிலைய வளாகத்துக்குள் தொண்டர்கள் நுழைந்தனர். விஜய், பிரசார பஸ்ஸில் ஏறி புறப்பட்டதும் அவரை ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.
மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர்.
- கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும்.
- டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும்.
கியா நிறுவனம் வயர்லெஸ் போன் மிரரிங் அடாப்டர் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 344 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது வயர்லெஸ் போன் மிரரிங் கொண்ட அனைத்து கியா மாடல்களிலும் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை கியா டீலர்ஷிப்கள் மற்றும் சேவை மையங்களில் வாங்கி பொருத்தலாம்.

பல்வேறு கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும். ஏனெனில் அதன் டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும். கியா நிறுவனம் ஏற்கனவே அதன் முழுமையான கார்களின் டாப் எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜர்களை வழங்குகிறது.
வயர்டு போன் மிரரிங் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் ஹூண்டாய் இதை வழங்கத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆப்ஷன் வருகிறது.






