என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
    X

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    • டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
    • சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விஜயை காண விமான நிலையத்தில் அதிகாலை முதல் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கட்டுக்கடங்காத கூட்டம் வந்த காரணத்தினால் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் தடுப்பு வேலி மற்றும் கயிறு கட்டி அவர்களை கட்டுப்படுத்தினர்

    தடுப்புகளை தாண்டி விமான நிலைய வளாகத்துக்குள் தொண்டர்கள் நுழைந்தனர். விஜய், பிரசார பஸ்ஸில் ஏறி புறப்பட்டதும் அவரை ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

    மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    மேலும் காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர்.

    Next Story
    ×