என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    கோவை:

    முன்னாள் கவர்னரும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் துணை ஜனாதிபதியாக, ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை.

    தி.மு.க தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான்.

    தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நோ ரீ என்ட்ரி தி.மு.க.



    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஒரு பதற்றம் தெரிந்தது.

    பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    உங்கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகிறார் என்று பார்ப்போம்.

    2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று பலமாக ஆட்சி அமைப்போம். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினார்களா. ஒன்றும் இல்லை.

    இதுவரை தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்து வந்தார்கள். இப்போது விருதையும் அவர்களே பெற்றுக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சி சொல்வதே ஒரு நகைச்சுவை தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு  ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும்.

    இந்நிலையில் படக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர் அதில் "கல்கி 2898 இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார். இதை நாங்கள் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவாகும். அவருடைய ஒத்துழைப்பு சரியாக இல்லாததால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். கல்கி போன்ற படத்திற்கு அதிக கமிட்மெண்ட் தேவை. தீபிகா படுகோனே நடிக்கும் வருங்கால படங்களுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளனர்.

    • தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
    • தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.

    ஆலய நுழைவு போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்றம் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திருக்கிறது.

    மதுரை ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்று 86 ஆண்டுகளும், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும். இது சமூகநீதிக்கு எதிரானதாகும்.

    எனவே, தமிழ்நாட்டு மக்கள் சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக கருதுகிற வகையில் வழிபாட்டுத் தலங்களில் அனைவரும் கடவுளை தரிசிக்கிற உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாடு அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
    • இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த கொதாபாய் பேசும் வீடியோவை வெளியிட்டார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது வாக்கு திருட்டால் பாதிக்கப்பட்டவர்களை மேடையில் ஏற்றி ராகுல் காந்தி ஆதாரங்களை கொடுத்தார். யாருடைய பெயரில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதோ அவரை நேரில் வரவைத்து ஊடகங்களிடம் காட்டினார்.

    மேலும், கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ராகுல் காந்தி, இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த பெண் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, " தேர்தல் ஆணைய இணையதளத்தில் இரண்டு விண்ணப்பங்கள் 36 வினாடிகளில் தாக்கல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. தயவுசெய்து இந்தப் படிவங்களை நிரப்ப முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று பாருங்கள். இந்திய இளைஞர்களே, முயற்சி செய்து பாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு படிவங்களை 36 வினாடிகளில் நிரப்ப முயற்சிக்கவும். இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

    நான் குறிப்பிட்டுள்ள இந்த நபர் படிவத்தை நிரப்பிய நேரத்தை கவனியுங்கள். அவர் அதிகாலை 4:07 மணிக்கு எழுந்து திடீரென 38 வினாடிகளில் இரண்டு படிவங்களையும் நிரப்பியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் முழுவதும் இந்தியர்கள் கையில் தான் இருக்கிறது. ராகுல் காந்தி இன்று வருவேன், உண்மையை சொல்வேன்., ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.
    • தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

    சென்னை கிண்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க. கைக்கூலி என்கிறார்கள்.

    * விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.

    * தி.மு.க.வை எதிர்த்து பேசினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி எனக் கூறுகிறார்கள்.

    * தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சக்தித் திருமகன் திரைப்படம் நாளை வெளியாகிறது

    விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியின் வழக்கமான ப்ரோமோஷனான படத்தின் முதல் 4 நிமிட காட்சியை தற்பொது வெளியிட்டுள்ளார்.

    அதில் ஒரு பழங்குடிப்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர், அவருகு ஒரு கைக்குழந்தை இருக்கிறது. இந்த கொலையை மறைக்க ஏபி க்ரூப்ஸ் கம்பெனி நுழைகிறது. கைக்குழந்தையை குப்பை மேட்டில் காவல் அதிகாரிகள் வைத்துவிட்டு செல்கின்றனர். ஸ்னீக் பீக் காட்சி படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    • சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகள்தான்.

    சென்னை:

    பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.

    கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த தி.மு.க. அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகள்தான். நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்
    • இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 1,00,000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள், வித்தியாசமான தந்தை பெயர்கள், வீட்டு எண்களுடன் உள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    வாக்குத் திருட்டு நடப்பதும், அதை யார் நடத்துவது, எங்கிருந்து நடத்துகிறார்கள் என அனைத்து தகவல்களும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும். பா.ஜ.க.-வை வெற்றிபெற வைக்க அவர் அதை அனுமதித்தார் என்றும், தகவல்கள் வெளிவந்த பிறகும் அதை மறைக்கிறார்

    இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்

    இந்த முறைகேடுகள் கர்நாடகாவில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களிலும் இதே போன்ற முறைகள் மூலம் வாக்குகள் திருடப்பட்டது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் ப்ளாக்மெயில் திரைப்படம் வெளியானது.

    ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் ப்ளாக்மெயில் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டும் வகையில் ஜி.வி.பிரகாஷ்குமார் பிரதமர் மோடிக்கு ஏழை தாயின் மகன் என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் "இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,

    140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    • முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    ஓமலூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க. உள் விவகாரத்தில் தலையிட மாட்டேம் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    * அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை.

    * என்னுடைய எழுச்சி பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.

    * கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அ.தி.மு.க.வில் வழக்கம்.

    * முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    * ஜெயலலிதா இருக்கும் வரை சென்னைக்கு வராதவர் டி.டி.வி. தினகரன்.

    * அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்து சென்றவர் டி.டி.வி. தினகரன்.

    * பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.

    * அமித்ஷாவை சந்திக்க யாருடன் சென்றேன் என்பதை கேட்க கூடாது.

    * கார் இல்லாததால் தான் கிடைத்த காரில் ஏறி சென்றேன்.

    * அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானது தான்.

    * டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைவது என்பது உட்கட்சி விவகாரம்.

    * செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றார். 

    • கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர்.
    • 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார்

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை

    கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.

    தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது . இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்திருந்தார். பின்னர் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் திடீரென கொடுமுடி அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து, உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    ×