என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்கு திருட்டு... தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
    X

    வாக்கு திருட்டு... தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

    • இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்
    • இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 1,00,000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள், வித்தியாசமான தந்தை பெயர்கள், வீட்டு எண்களுடன் உள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    வாக்குத் திருட்டு நடப்பதும், அதை யார் நடத்துவது, எங்கிருந்து நடத்துகிறார்கள் என அனைத்து தகவல்களும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும். பா.ஜ.க.-வை வெற்றிபெற வைக்க அவர் அதை அனுமதித்தார் என்றும், தகவல்கள் வெளிவந்த பிறகும் அதை மறைக்கிறார்

    இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்

    இந்த முறைகேடுகள் கர்நாடகாவில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களிலும் இதே போன்ற முறைகள் மூலம் வாக்குகள் திருடப்பட்டது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×