என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.
- வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.
என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.
* கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன்.
* அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.
* அரசியல்தான் எனது எதிர்காலம்.
* எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம்.
* வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.
* கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது
* நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.
* எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்விணை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
- தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
- இதுபோன்ற அறிவிப்புகளால் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.
சென்னை:
நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.
எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தவேண்டும்.
இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளா மாநிலம் கொல்லம்-எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
- தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும்
உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு காலத்தில் கடிதம்தான் தொலைத்தொடர்பு சாதனமாக இருந்தது. நாளடைவில் வளர்ந்து வரும் நவீன உலகில் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள், சமூக வலைதளங்கள் என கருத்துக்களை பரிமாற்றம் செய்ய ஏராளமான வசதிகள் வந்துவிட்டது.
இருப்பினும் தபால் கடிதங்களை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்லவும், அந்த கடிதம் எழுதும் பழக்கத்தின் மூலம் பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் இருக்கும் போதை பழக்கங்களில் இருந்து அவர்கள் விடுபடவும் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் இந்த கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என யார் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறார்களோ, அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து உடனடியாக விடுபட்டு இந்த சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
பல மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்தில் குடும்பத்தில் பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை மற்றும் அதனால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிடும் நிலை குறித்தும், வாழ்வில் தினம் தினம் தங்கள் அனுபவிக்கும் வலிகளை வரிகளாக உணர்ச்சி பொங்க எழுதி இருந்தனர்.
நான் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை கூட பகிர்ந்துகொள்ள முடியாத அளவில், நீங்கள் போதைப் பழக்கத்தால் ஆட்படும் நிலை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று மாணவிகள் தங்களின் தந்தைக்கு கடிதம் எழுதி இருந்தனர். தங்களின் இன்ப துன்பங்களை மாணவ, மாணவிகள் கடிதங்களில் எழுதி இருந்ததோடு, "வெறும் வார்த்தைகள் அல்ல எங்களின் வலிதான் இந்த வரிகள் என்பதை புரிந்து உடனே மனம் திருந்தி போதை பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள்" என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அவர்கள் எழுதி இருந்த கடிதங்களில் பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் தாங்கள் எழுதிய கடிதங்களை போதை பழக்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக தபால் நிலையத்தில் சென்று அஞ்சல் பெட்டியில் செலுத்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.
மாணவ-மாணவிகள் தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஏற்கனவே இதுபோன்று மாணவ, மாணவிகள் இதே பள்ளியில் கடிதம் எழுதியதின் பயனாக சில பெற்றோர் தங்களின் போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்தனர் என்பது குறிப்பித்தக்கது.
- தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜானுக்கு உடல்நலக்குறைவு.
- எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இவ்வாறு அவர் கூறினார்:-
காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார் உதயநிதி. ஆனால், இப்போது காங்கிரஸ் கை நழுவிவிட்டது.
அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்றார்கள், சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.
இன்னும் 2 அமாவாசைகள் தான் உள்ளது. திமுகவின் ஆட்சிகாலம் முடியப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அறம் படம் இரண்டு பிரிவுகளில் பரிசு வென்றுள்ளது.
- அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும்..
தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தமிழ் திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்தது. சிறந்த திரைப்படங்களுக்கான விருது மாநகரம், புரியாத புதிர், அறம், விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைகளுக்கான விருது கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமால் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் இந்த விருதுகள் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குனருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன். உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை, பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும்..
உரிமை கோருபவர்களை தன் அமைப்புக்கும், அரசுக்கும் எதிரானவர்களாகவும், தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் கோபி நயினாரின் அறம் படம் இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறம் படத்திற்காக திராவிடர் கழகம் வழங்கிய விருதை இவர் திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்குத் வன்மையான கண்டனங்கள்.
தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக கண்டனம் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம்!
கிருஷ்ணராபுரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கனிம வளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 'நியூஸ் தமிழ்' செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
சட்ட விரோத முறைகேடுகள் நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற ஊடகவியலாளர்களை, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி அவர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகத்துறையின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்குத் வன்மையான கண்டனங்கள். ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் எந்தச் சக்தியையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
- இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கல்லூரி வளாகங்களுக்கு உள்ளேயே இன்றுடன் ஏழாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்று கண்ப
தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மறுபுறம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தரப்படாத சம்பளத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தரவேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
- குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்
- பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே தொண்டர்களை அனுமதிக்க வேண்டும்; முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்; அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% மேல் மக்கள் கூடினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்; அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் சாலைவலங்களை முறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.
தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே 'கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது.
நேற்றும் தங்கம் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில் சவரன் ரூ.1,26,000-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.
சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.950 குறைந்த நிலையில் ரூ.15,850க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ரூ.10,000 ஒரு கிலோ ரூ.405 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
- கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
- நிருபரை மீட்க சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளார்.
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அளவுக்கு அபராதம் விதித்தும் கல்குவாரி செயல்பட்டு வருவதாகப் கூறப்பட்டது.
இதைதொடர்ந்து, புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற திருச்சி செய்தியாளர் கதிரவனை சுற்றிவளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் குவாரியில் இருந்து நிருபர், ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.
திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட கும்பல் நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
4 பேரையும் கும்பல் கடத்திய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் யாரையும் தொடர் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த நிலையில், நிருபரை மீட்க டிஎஸ்பி தலைமையிலான காவல் படையை சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வௌியானது.
இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.






