search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    .
    X
    .

    நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்

    நாமக்கல்லில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வத்துடன் அதிகளவில் வந்திருந்தனர்.
    நாமக்கல்: 

    நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  14 லட்சத்து 64 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இதுவரை முதல் தவணை தடுப்பூசி  83.16 சதவீதம் பேருக்கு அதாவது 12 லட்சத்து 17 ஆயிரத்து 781 பேருக்கு போடப்பட்டு உள்ளது. இன்னும்  முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 46 ஆயிரத்து 519 பேருக்கு போடவேண்டி உள்ளது.

    2-ம் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 28 ஆயிரத்து 116 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 லட்சத்து 67 ஆயிரத்து 854 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி போட வேண்டி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்  இதுவரை நடந்த 18 மெகா தடுப்பூசி முகாம்களில்  6 லட்சத்து 99 ஆயிரத்து 772 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். 

    இதை தொடர்ந்து 19-ம் கட்ட  மெகா முகாம் இன்று நடைபெற்றது.  456 நிலையான முகாம்கள், 34 நடமாடும் குழுக்கள் மூலமாகம் ஆக மொத்தம் 490 முகாம்கள்  மூலமாக இப்பணி நடந்தது. 

    இந்த முகாம் பணிகளில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள்,   415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொரோனா  தடுப்பூசி போட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும்   உயிரிழப்பு குறைவதால் அனைவரும் தடுப்பூசி  போட்டு கொள்ள வேண்டும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும், என்றும் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்றும்  அதிகாரிகள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.
    Next Story
    ×