என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்ற தேர்தலில் போட்டி- ரங்கசாமியின் அறிவிப்பால் என்.ஆர்.காங். தொண்டர்கள் உற்சாகம்
  X

  பாராளுமன்ற தேர்தலில் போட்டி- ரங்கசாமியின் அறிவிப்பால் என்.ஆர்.காங். தொண்டர்கள் உற்சாகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி அறிவித்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #parliamentelection #nrcongress #rangasamy

  புதுச்சேரி:

  தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் அ.தி.மு.கவின் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. புதுவையை பொறுத்தவரை தமிழகத்தில் அமையும் கூட்டணியே இங்கேயும் தொடரும்.

  இதன்படி புதுவையிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதே நேரத்தில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுவையில் மாநில கட்சியாக திகழ்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது.

  அந்த கட்சியின் வேட்பாளர்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

  இதனால் காங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் உருவாகும் அ.தி.மு..க, பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் பேச்சு உள்ளது. இதை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று உறுதி செய்தார்.

  கட்சியின் ஆண்டு விழாவையொட்டி நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார்.

  அதோடு புதுவை பாராளுமன்ற தொகுதியில் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார். வழக்கமாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பொறுத்தவரை அதிரடியாக எந்த முடிவையும் அறிவிக்க மாட்டார்.

  கடந்த சட்டமன்ற தேர்தலில் இறுதிவரை யாருடன் கூட்டணி என்று சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் வேட்பாளர் யார்? என்றே தெரியவந்தது.

  தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் வேட்புமனு தாக்கலுக்கு நெருக்கத்தில்தான் அறிவிப்பு வெளியிடுவார் என கட்சியினரே எதிர்பார்த்தனர்.

  ஆனால், இதற்கு நேர் எதிராக கட்சியின் ஆண்டு விழாவில் உறுதிபட பாராளு மன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

  இது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என உறுதிபூண்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

  Next Story
  ×