என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
என்று அகர்கர் கூறினார்.
- 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்தாண்டை விட விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலியின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
2 ஆம் இடத்தில உள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 170.7 மில்லியன் டாலராகும். 3 ஆம் இடத்தில உள்ள ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 145.7 மில்லியன் டாலராகும். கடந்தாண்டை விட ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு 21% உயர்ந்துள்ளது.
116.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட் 4 ஆம் இடத்திலும் 112.2 மில்லியன் டாலர் மதிப்புடன் சச்சின் தெண்டுல்கர் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் எம்.எஸ்.தோனி 7 ஆம் இடத்திலும் 48.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ரோகித் சர்மா 17 ஆம் இடத்திலும் 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் ஹர்திக் பாண்ட்யா 20 ஆம் இடத்திலும் 38.1 மில்லியன் டாலர் மதிப்புடன் பும்ரா 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.
- நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன்.
- சில நேரங்களில் வில்லன், காமெடியனாகவும் இருக்க வேண்டும்.
17-வது ஆசிய கோப்பை போட்டி கடந்த 09-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார்.
இதனால் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் விளையாடினார். கடந்த சில டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி தொடர்ந்து 2 சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் எந்த வரிசையில் ஆடுவார் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் 3-வது வரிசை மற்றும் 4,5 வரிசையிலும் ஆடினார். அவருக்கான நிரந்தர இடம் என்று ஏதும் கொடுக்கவில்லை. குறிப்பாக நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் விழுந்தும் சஞ்சு சாம்சன் களமிறங்காமல் இருந்தார்.
அவரை மீண்டும் அணியில் இருந்து கழற்றி விட நிர்வாகம் முயற்சிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் நீங்கள் எந்த வரிசையில் விளையாட விருப்பமாக உள்ளீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில் பின்வருமாறு:-
40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து நாட்டின் உயரிய விருது பெற்ற மோகன்லால், எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன். அதனால், ஹீரோவாக மட்டுமாகவே இருப்பேன் என்று சொல்லமாட்டேன். சில நேரங்களில் வில்லன், காமெடியனாகவும் இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் இறங்கி விளையாட வேண்டும்.
என அவர் கூறினார்.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின்.
அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
இந்தியாவுக்கு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கொடுத்துள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலவேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜெய் ஷா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
- ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத உள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அணியாக முன்னேறுவது யார்? என்பது இன்று தெரியும். இன்று நடைபெறம் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.
பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதும். இந்தப் போட்டித் தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை மோதி இருந்தன. 2 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. கடந்த 14-ந்தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் 21-ந்தேதி நடைபெற்ற 'சூப்பர் 4' சுற்று போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான ஆட்டத்தில் விளையாட்டுக்கு அப்பால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கைகுலுக்காத நிகழ்வு, வீரர்கள் இடையேயான வாக்குவாதம், ஆத்திரமூட்டும் சைகைகள் போன்ற சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக புகார்
- சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டது.
ஆசிய கோப்பை தொடரில் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்
சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதி, அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் அளித்தது.
இந்நிலையில், சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி, முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விளக்கம் கேட்டுள்ளார்.
- முதுகு வலிக்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அசௌகரியமாக உணர்ந்துள்ளதாக தகவல்.
- 6 மாதம் ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பிசிசிஐ-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் வேண்டுகோளை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. அதேபோல் ரஞ்சி கோப்பை சாம்பியனுக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா விளையாடும் இரானி கோப்பைக்கும் அவருமைய பெயர் பரிசீலனை செய்யப்படமாட்டாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய அவர், 2ஆவது டெஸ்டில் இருந்து விலகினார்.
முதுகு வலி காரணமாக லண்டனில் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து மீண்டும் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது, அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். தனக்கு 6 மாதம் ஓய்வு தேவை என பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்குப்ப பிறகு துலீப் டிராபி அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் விளையாடினார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதன்பின் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். 2023 ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
- ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன 2நிலையில், ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்திய 'ஏ' அணிஅணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியதால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்தியா A அணியை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி:-
ஷ்ரேயாஸ் ஐயர் (C), பிரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சினுர்ஜீத் சிங்
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:
ஷ்ரேயாஸ் லியர் (C), திலக் வர்மா (VC), அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், துதிஷ்னோ சிங், துதிஷ்னோ சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்,
- இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- ரிஷப் பண்ட் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசியக் கோப்பை யில் விளையாடி வருகிறது. இதன்பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:-
சுப்மன் கில் (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (WK), ரவீந்திர ஜடேஜா (VC), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன் (WK), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்,
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
- பாகிஸ்தான் வீரர்கள் மீது இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இதனிடையே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், சாஹிப்தாவுக்கு எதிராக ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு கோபம் ஏற்படும் வகையில் சைகைகளை செய்ததாக பாகிஸ்தான் வீரர்கள் மீது இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
- சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.
முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சைப் ஹசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் களம் கண்டனர்.
சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.






