என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா வெஸ்ட் இண்டீஸ்"
- இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- ரிஷப் பண்ட் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசியக் கோப்பை யில் விளையாடி வருகிறது. இதன்பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் விளையாடிய கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:-
சுப்மன் கில் (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (WK), ரவீந்திர ஜடேஜா (VC), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன் (WK), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்,
கேரள மாநிலத்தில் ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது. இதற்கான இந்திய அணி திருவனந்தபுரம் சென்றுள்ளது.#akdfa#akdfacutout#35ftcutoutforMSD#cutoutofdhoni#keralacutout#allkeraladhonifansassociation@msdhoni@SaakshiSRawat@ChennaiIPL@BCCI@cricbuzz@StarSportsIndiapic.twitter.com/OFRUnZvmVT
— All Kerala Dhoni Fans Association(AKDFA) (@AKDFAOfficial) October 31, 2018
திருவனந்தபுரம் வந்துள்ள டோனியை பாராட்டும் வகையில் ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் சார்பில் 35 அடி உயர கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
#Thala's Vishwaroopam getting ready at Trivandrum! #WhistlePodu#INDvWI 🦁💛 #Yellove from @AKDFAOfficial! pic.twitter.com/AL8hxZ6DWz
— Chennai Super Kings (@ChennaiIPL) October 31, 2018
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம்பிடித்திருந்தார். உமேஷ் யாதவ் உடன் புதுப்பந்தில் பந்து வீச்சை தொடங்கிய அறிமுக வீரரான ஷர்துல் தாகூர் 10 பந்துகள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.
இதனால் உமேஷ் யாதவ் மட்டுமே வேகப்பந்து வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்கள். இன்று இந்தியா 95 ஓவர்கள் வீசியது. இதில் உமேஷ் யாதவ் மட்டும் 23 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பேட்டிங் செய்ய சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது மிகக்கடினம் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்த வழியில் இருந்தது. எங்களால் வழக்கமான ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ செய்ய இயலவில்லை. ஆடுகளம் மிகவும் ஃப்ளாட்டாக இருந்தது.
இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். எவ்வளவு முடியோ அந்த அளவிற்கு ரன்களை கட்டுப்படுத்த முற்சி செய்யும்போது, அவர்கள் ஒன்று இரண்டு என ரன்கள் எடுத்து விட்டார்கள்’’ என்றார்.

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5-வது வீரர் இவர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் இடம்பெறவில்லை. கீமோ பால் செர்மன் லெவிசுக்கு பதில் ஜேசன் ஹோல்டர், ஜோமல் வாரிகன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
அணிகள் விவரம்:
இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், குல்தீப், ஷர்துல் தாக்கூர்.
வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வைட், பாவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டவ்ரிச், வாரிகன், தேவேந்திர பிஷூ, கேப்ரியேல். #INDvsWI #TeamIndia
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிரேக் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரில் பிராத்வைட்டையும், 5-வது ஓவரில் பொவேலையும் முகமது ஷமி அடுத்தடுத்து வெளியேற்றினார்.

அதன்பின் வந்த ஷாய் ஹோப் 10 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து க்ளீன் போல்டானார். ஷிம்ரோன் ஹெட்மையர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சுனில் அம்ப்ரிஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டிஸ் 74 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ் உடன் கீமோ பால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 94 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸை விட 555 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.






